தீபாவளிக்கு தங்கம் வாங்க போறீங்களா.. அது ஒரிஜினலா இல்லை போலியானு செக் பண்ணுங்க.. இது ரொம்ப ஈஸி
சென்னை: உங்களிடம் இருக்கும் தங்கம் உண்மையானதுதானா அல்லது அது போலியானதா என்பதைக் கண்டறிவது ரொம்பவே ஈஸி. இதற்கு வெறும் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
இந்தியாவில் தங்கம் தான் எப்போதும் முக்கியமான சேமிப்பு கருவியாக இருக்கிறது. சிறுக சிறுக சேர்த்தாலும் கூட எப்படியாவது தங்கத்தை வாங்க வேண்டும் என்பதே இங்குப் பலரின் சேமிப்பு திட்டமாக இருக்கிறது.

ஆபத்தான நேரத்தில் எளிதாகப் பணம் பெறலாம், விலை குறையாது என்று தங்கத்தை வாங்க நமக்கு இங்கே காரணங்கள் இருக்கிறது. கொரோனா தொடங்கிப் பல ஆபத்தான காலங்களில் தங்கமே பொதுமக்களுக்கு உதவியுள்ளது.
தங்கம்: அப்படிப்பட்ட தங்கத்தை இப்போது நாம் வாங்க பல்வேறு வழிகள் இருக்கவே செய்கிறது. என்ன தான் இப்போது டிஜிட்டல் முறையிலும் கூட தங்கத்தை வாங்கலாம் என்றாலும் கூட நம்மில் பெரும்பாலானோர் இன்னுமே தங்க நகைகள் அல்லது காயின்களாகவே தங்கத்தை வாங்குகிறார்கள். அப்படி நாம் தங்கம் வாங்கும் போது நம்மில் பலருக்கும் இந்த தங்கம் ஒரிஜினல் தானா என்ற கேள்வி வந்திருக்கும்.
கடைக்காரர்களிடம் நாம் என்ன கேட்டாலும் அதை ஒரிஜினல் தங்கம் என்றோ சொல்வார்கள். அவர்களுக்கு அவர்கள் லாபம் முக்கியம். எனவே, அவர்களையும் இதில் முழுமையாக நம்ப முடியாது. அப்போது நாம வாங்கும் தங்கம் ஒரிஜினல் தானா என்பதைக் கண்டுபிடிக்க என்ன தான் வழி இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. ஒரு அட்டகாசமான வழி இருக்கிறது. இதை செக் செய்யப் பெரிய விலையுயர்ந்த சாதனங்கள் எல்லாம் தேவையில்லை. வெறும் ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும்.
ஒரிஜினல் தானா: வீட்டில் இருந்தாலும் சரி, தங்க நகைக்கடையில் இருந்தாலும் சரி மிக எளிதாக அந்த தங்கம் ஒரிஜினல் தானா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். மத்திய அரசின் உமாங் செயலி மூலம் இதை நாம் கண்டுபிடிக்கலாம். இதை நாம் எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ப்ளே ஸ்டோர் (PlayStore) மற்றும் ஐபோன்களில ஆப் ஸ்டோரில் (App Store) இருந்து உமாங் Umang செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். அடுத்து ரெஜிஸ்டர் செய்ய அல்லது ஏற்கனவே ரேஜிஸ்டர் செய்திருந்தால் லாஜின் செய்ய Register/Login என்ற இடத்திற்குச் செல்லவும்.
என்ன செய்ய வேண்டும்: ரெஜிஸ்டர் செய்ய அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பதிவிடுங்கள். ரெஜிஸ்டர் செய்யவும் சரி, லாகின் செய்யவும் சரி முதலில் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு ஒடிபி அனுப்பப்படும். அதை வைத்து லாகின் செய்யவும். அந்த செயலியில் லாகின் செய்தவுடன். அதில் சேர்ச் (Search) என்ற இடத்தில் 'Verify HUID' என்ற தேடுங்கள். அதில் BIS Care என்று வரும். அதை செலக்ட் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் தங்க நாணயம் அல்லது தங்க நகையில் உள்ள ஹால்மார்க் எண் அல்லது HUID எண்ணை அதில் டைப் செய்யுங்கள். அதை டைப் செய்து verify என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்கள் தங்கத்தில் இருக்கும் ஹால்மார்க் ஒர்ஜினல், அது தூய்மையானது என்றால் நகைக்கடைப் பதிவு எண் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் விவரங்களை அதில் வரும். அதில் தங்கம் எந்தளவுக்குத் தூய்மையானது, ஹால்மார்க் செய்யப்பட்ட தேதி, கடையின் பெயர் மற்றும் பிற விவரங்களும் இருக்கும்.
அதேநேரம் உங்கள் தங்கம் போலியானது என்றால் அல்லது ஹால்மார்க் பெறவில்லை என்றால் இந்த விவரங்கள் வராது. உங்கள் தங்கம் போலியானது அல்லது அது அசுத்தமானது என்றால் நீங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம்.
-
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications