Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 உரிமைத் தொகை வரலையா? இந்த வெப்சைட் வேலை செய்யுது.. ரேசன் கார்டு நம்பர் இருந்தால் போதும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலையை அறிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.

திமுக 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டு தகுதி வாய்ந்த குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

 How to check Rs.1000 magalir urimai thogai scheme in a website using ration card number

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும் பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் எனவும் குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்து உள்ள குடும்பங்கள், வீட்டு உபயோக மின்சாரம் ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக பயன்படுத்தும் குடும்ப தலைவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வருமான வரி செலுத்துபவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதை பெற முடியாது.

கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காக வைத்து உள்ளவர்கள், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப தலைவர்கள், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் இதை பெற முடியாது என அரசு அறிவித்தது.

கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்டு 5 வரை முதல் கட்ட முகாமும், ஆகஸ்டு 14 வரை 2 வது கட்ட முகாமும், ஆகஸ்டு 18 முதல் 20 வரை சிறப்பு முகாம் என 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது பல்வேறு கட்டங்களாக சரிபார்க்கப்பட்டன. இறுதியாக 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கான SMS அனுப்பி வைக்கப்பட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. அதில் சென்று ஆதார் எண்ணை கொடுத்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை கொடுத்தால் விண்ணப்ப நிலவரத்தை அறியலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த இணையதளம் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்றாமல் இருப்பவர்களுக்கு ஓடிபி எண் வருவதில்லை என்ற பிரச்சனையும் இருந்தது. இந்த நிலையில் ரேசன் கார்டு எண்ணை கொடுத்து மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலவரத்தை பார்க்கும் வசதி உள்ளது.

இந்த லிங்கை : https://t.co/v16d7jyvfi கிளிக் செய்தால் குடும்ப அட்டை எண் கேட்கும். ஸ்மார்ட் கார்டில் புகைப்படத்தின் கீழ் உள்ள 333 என்று தொடங்கும் எண்ணை அதில் டைப் செய்து 'சமர்பிக்க' என்ற நீள நிற பட்டனை அழுத்தினால் உங்கள் விண்ண நிலவரம் தெரிந்துவிடும். எந்த தடங்களும் இல்லாமல் இந்த இணையதளம் வேலை செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+