உங்கள் பேங்கில் எவ்வளவு பணம் இருக்கு.. கூகுள் பே,போன் பே, பேடிஎம் மூலம் எப்படி அறிவது?
கூகுள் பே,போன் பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் எப்படி உங்கள் வங்கி கணக்கில் இருப்பை ஆன்லைனில் அறியலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை: கூகுள் பே,போன் பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் எப்படி உங்கள் வங்கி கணக்கில் இருப்பை ஆன்லைனில் அறியலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) சிஸ்டம் Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற ஆன்லைன் பேமெண்ட் தளங்களைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. அதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் Paytm, Google Pay, PhonePe போன்ற யூபிஐ ஆப்பில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
இப்போது யாரை பார்த்தாலும் பேடிஎம், கூகுள்பே, போன் பே போன்ற யூபிஐ ஆப்பை பயன்படுத்திதான் மளிகை கடை முதல் மால் வரை பயன்படுத்துகிறார்கள். தற்போது உள்ள நிலையில் உங்கள் வங்கிக் கணக்கை Paytm, Google Pay, PhonePe அல்லது வேறு ஏதேனும் UPI பேமெண்ட் ஆப்ஸுடன் இணைத்த பிறகு இப்படி பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அதேபோல் பரிவர்த்தனை விவரங்கள், கணக்கு இருப்பு போன்ற வங்கிக் கணக்கு விவரங்களையும் அறிய முடியும். சில நொடிகளில் எந்த நேரத்திலும் ஆன்லைனில் இந்த ஆப்ஸில் உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். Paytm, Google Pay மற்றும் PhonePe ஆகியவற்றில் உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை எப்படி பார்ப்பது என்பதை விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

பேங்க் பேலன்ஸ்
Paytm இல் ஆன்லைனில் அக்கவுண்ட் பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?
உங்கள் ஸ்மார்ட்போனில் Paytm ஆப்பை திறக்க வேண்டும்.
Balance & History ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் வங்கிப் பெயருக்கு அருகில் உள்ள செக் பேலன்ஸ் பட்டனை கிளிக் செய்யுங்கள்
பின்னர் உங்கள் UPI பின்னை என்டர் செய்து சரிபார்க்கும் பொத்தானை அழுத்துங்கள். இப்போது பேடிஎம் வழியாக உங்கள் பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸை அறிய முடியும்.

கூகுள் பே அக்கவுண்ட்
Google Payயில் ஆன்லைனில் வங்கி இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay ஆப்பை திறக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தின் கீழே ஸ்க்ரால் செய்து, பேங்க் பேலன்ஸ் செக் பட்டனைத் தட்டுங்கள்.
உங்கள் UPI பின்னை உள்ளிட்டு சமர்ப்பி என்ற பொத்தானைத் தட்டுங்கள். இப்போது பேலன்ஸை அறிய முடியும்.

போன் பே அக்கவுண்ட்
PhonePe இல் ஆன்லைனில் வங்கி இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
உங்கள் ஸ்மார்ட்போனில், PhonePe ஆப்பை திறக்க வேண்டும்.
பணப் பரிமாற்றங்கள் தாவலின் கீழ், முகப்புப் பக்கத்தில் உள்ள காசோலை வங்கி இருப்பு விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் UPI வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுங்கள்.
பின்னர், உங்கள் UPI பின்னை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானை அழுத்தவும்.

உங்கள் கணக்கு
இறுதியாக அறிய வேண்டியவை
Paytm, Google Pay மற்றும் PhonePe ஆகியவை பல வங்கிக் கணக்குகளை ஒருங்கிணைக்க பயனர்களுக்கு வழங்குகின்றன, இதன் மூலம் நீங்கள் இணைக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் எளிதாகக் கண்காணிக்கலாம், உங்கள் பரிவர்த்தனை வரலாறு, வங்கி இருப்பு மற்றும் பிற விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications