வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? சரிபார்ப்பது எப்படி? 1 நிமிடத்தில் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
சென்னை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப் பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஒரு நிமிடத்தில் எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சட்டபேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை அண்மையில் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் மொத்தம் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7 ஆயிரத்து 617 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்க
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதைப் பார்க்க voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மூலம் தேர்தல் தெரிந்து கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணையத்தின் ECI NET என்ற மொபைல் ஆப் மூலமாகவும் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் மொபைல் எண்ணில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் நீங்கள் தகவலைப் பெற முடியும்.
ஆன்லைனில் சரிபார்க்கும் முறை
https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo
https://electoralsearch.eci.gov.in/
இந்த இரண்டு இணையதள முகவரிகளை கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்களுக்கான மொழியைத் தேர்வு செய்யவும்.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்.
உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்யவும்
அதன் பின்னர் கீழ் உள்ள Captcha code -ஐ சரியாகப் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
இதையடுத்து, உங்களுடைய வாக்காளர் விவரம் அனைத்தும் வந்துவிடும். Assembly constituency number, part number, part serial number note என அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இதுபோன்று எந்தவொரு தகவலும் உங்களுக்கு வரவில்லை எனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று அர்த்தம். நீங்கள் மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
புதிய வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் செய்ய வேண்டியவை:
நீங்கள் புதிய வாக்காளராக இருந்தாலோ அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் உங்களுக்குத் தெரியாது என்றால் SEARCH BY DETAILS என்பதை க்ளிக் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
SEARCH BY DETAILS என்பதை முதலில் க்ளிக் செய்யவும். பின்னர், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அனைத்து தகவல்களையும் பிழையின்றி பதிவிடவும். கேப்ட்சா கோடு சரியாக பதிவிடவும். பின்னர் Search ஆப்சனை க்ளிக் செய்து தகவலைப் பெறலாம்.
எந்த தகவலும் தெரியாதவர்களா?:
வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட எந்தவொரு தகவலும் சரியாக தெரியாது என்பவர்களா நீங்கள். SERACH BY MOBILE என்ற ஆப்ஷன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் SERACH BY MOBILE என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
பின்னர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிடவும்.
உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும்.
OTP எண்ணை சரியாக உள்ளீடு செய்து, கேப்ட்சாவை டைப் செய்து search ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் விவரங்களைப் பெறலாம்.
SMS மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்
உங்கள் செல்போனில் மெசேஜ் ஆப்பில்
ECI உங்கள் EPIC எண்
(எடுத்துக்காட்டு: ECI GPK0000000) டைப் செய்து
'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால் ஒரு சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்து விவரங்களும் குறுஞ்செய்தியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications