"முட்டாள்தனம்.." இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. அப்புறம் கஷ்டம்தான்.! ஆக்ரோஷமான ஆனந்த் சீனிவாசன்
சென்னை: மூழ்கடிக்கும் அளவுக்கு நாம் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தால் அதில் இருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன். கடன் வாங்காமல் இருப்பது எப்படி.. எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ச்சியாகப் பல வீடியோக்களில் விளக்கியுள்ளார்.
பொதுவாகவே என்ன ஆனாலும் கடன் வாங்கவே கூடாது என்பதே அவரது கருத்து. இருப்பினும், இங்கே பலரும் கடன் வலையிலேயே சிக்கியுள்ளனர். அப்படி கடன் வாங்கியிருந்தால் அதை எப்படி அடைக்க வேண்டும் என்பதைச் சமீபத்தில் அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார்.

முதல் வழி: அதில் அவர் கூறுகையில், "முதலில் நம்மிடம் என்ன கடன் எல்லாம் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அதிக கடனில் இருந்து குறைவான கடன் வரை அனைத்தையும் வரிசையாக எழுத வேண்டும். எது வட்டி செலுத்த வேண்டிய கடன் எதற்கு வட்டி தேவையில்லை என்பதையும் எழுத வேண்டும். இதில் கடன்களை முழுமையாக அடைக்க இரண்டு வழிகள் உள்ளன.
முதல் வழியில் நாம் முதலில் குறைந்தபட்ச கடனை அடைக்க வேண்டும். அப்படியே அடுத்தடுத்து அதிகமாக இருக்கும் கடன்களை நாம் அடைக்க வேண்டும். அதாவது குறைந்த தொகை கடன்களை முதலில் அடைக்க வேண்டும். அவற்றை அடைத்தாலே நமக்கு ஒரு நம்பிக்கை வரும். நம்மால் இந்த கடன் சூழல்களில் இருந்து வெளியே வர முடியும் என்று நம்பிக்கை கிடைக்கும். இப்படி அனைத்து கடன்களைச் செய்ய வேண்டும். இது முதல் வழி. இதற்குப் பெயர் ஸ்னோபால் (snow ball method)
இரண்டாவது வழி: எந்தவொரு கடனிலும் வட்டி அதிகமாக இல்லை என்றால் நாம் இதை முறையைப் பயன்படுத்தலாம். அதேநேரம் அதிக தொகை இருக்கும் கடனில் வட்டி அதிகமாக இருந்தால் நாம் வேறு ஒரு முறையைப் பயன்படுத்த வேண்டும். இதற்குத் தங்கம் தேவைப்படும். வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து கடன் வாங்கி அதிக வட்டி, அதாவது 12% மேல் வட்டி இருக்கும் கடன்களை முதலில் அடைக்க வேண்டும்.
மற்ற கடன்களைக் காட்டிலும் தங்கத்திற்கு வட்டி குறைவு.. எனவே அதிக கடன் வட்டியுடன் இருக்கும் கிரெடிட் கார்ட் கார்டு, பர்சனல் லோன் கடன்களை இப்படி முதலில் அடைத்துவிட வேண்டும். இப்போது நமக்கு அதிக வட்டி இருக்கும் கடனாகத் தங்க நகைக் கடன் மட்டும் இருக்க வேண்டும்.

இந்த தப்பை செய்யாதீங்க: ஆனால் இந்த இடத்தில் பலரும் ஒரு பெரிய தப்பைச் செய்வார்கள். தங்க நகைக் கடனில் மாதம் மாதம் நாம் அசலை செலுத்தத் தேவையில்லை என்பதால் பலரும் வருடத்திற்கு ஒரு முறை வட்டியை மட்டும் செலுத்துவார்கள். இது தங்கம் நமது கையை விட்டுச் செல்ல ஒரு வழியாகும். அப்படிச் செய்யாமல் வட்டியை மாதாமாதம் கட்டி அசலிலும் குறைந்தது 5% கட்ட வேண்டும். அப்போது தான் 2, 3 ஆண்டுகளில் தங்க நகையை முழுமையாக மீட்க முடியும்.
அடுத்ததாக வட்டி இல்லாத கடன்களை அடைத்து முடித்துவிடலாம். இன் பார்முலா ரொம் ஈஸி.. முதலில் அதிக கடன் இருக்கும் கடனை தங்க நகைக் கடனாக மாற்றி.. அதன் பிறகு நாம் தங்க நகைக் கடனையும் அடைக்கிறோம். அதாவது தலை அளவுக்குத் தண்ணீரில் நாம் மூழ்கியிருந்தால் அதைத் தங்க நகைக் கடன் மூலம் மார்பளவுக்குக் குறைத்து அதன் பிறகு முழுமையாக அடை அடைக்கிறோம். இதன் பெயர் அவலாஞ்சி முறை (avalanche method). ஒருவரது வயது, வருமானம், நிதிநிலையைப் பொறுத்து இது மாறும்.
இது முட்டாள்தனம்: சிலர் 5 நண்பர்களிடம் வட்டியில்லாமல் கடன் வாங்கி இருப்பார்கள். அதை ஒருங்கிணைக்கிறேன் என்ற பெயரில் வங்கியில் கடன் வாங்குவார்கள். இது முட்டாள்தனம்.. அதாவது வட்டியே இல்லாத கடனை ஒருங்கிணைக்கிறேன் என்ற பெயரில் காஸ்ட்லியான வட்டியுடன் கூடிய கடனாக மாற்றுகிறார்கள். எனவே, இந்த தப்பை செய்யவே கூடாது. மேலும், கடனை அடைக்க பர்சனல் லோன் வாங்குவதற்குப் பதிலாகத் தங்க நகைக்கடன் வாங்குவதே பெஸ்ட்" என்று அவர் தெரிவித்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications