லாஸ்ட் சான்ஸ்.. தவற விட வேண்டாம்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1.. வெளியான முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் டவுன் லோட் செய்வது தேர்வாளர்கள் இடையே அதிகரித்துள்ளது.

குரூப் 1 தேர்விற்கு நீங்கள் இன்னும் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யவில்லை என்றால் டிஎன்பிஎஸ்டி இணைய பக்கத்தில் செய்யலாம் . டிஎன்பிஎஸ்சி பக்கத்தில் உள்ள ஹால் டிக்கெட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து போகலாம். அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற பக்கத்திற்கும் செல்லலாம். இதில் துறை தேர்வுகள் என்பதை கிளிக் செய்து , அதில் ஹால் டிக்கெட் டவுன்லோடு ஆப்ஷனை கிளிக் செய்து .. உங்கள் அப்ளிகேஷன் ஐடி, பிறந்த தேதி மூலம் டவுன்லோடு செய்யலாம்.

tnpsc group 4 exam tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு; இதையடுத்து கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

குரூப் 1 தேர்வு: இந்த நிலையில் இந்த மாதம் 13ம் தேதி குரூப் 1 தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் நேற்று இரவோடு இரவாக வெளியிடப்பட்டது.

https://tnpsc.gov.in/ எனப்படும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இதற்கான ஹால் டிக்கெட்டை பெற முடியும்.இதை டவுன்லோட் செய்து தேர்வு நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

முக்கியம்: நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 1 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இதிலும் இன்வாலிட்டி மதிப்பெண் முறையை தொடர உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+