வாக்காளர் அடையாள அட்டையை ஈஸியாக டவுன்லோடு செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ
சென்னை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆன்லைன் மூலமாக எளிமையாக டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தக் காத்திருக்கின்றனர்.

தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு செய்யும் முறை:
முதலில் https://voters.eci.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.
அதில் epic download என்பதை கிளிக் செய்யவும்.
அல்லது https://voters.eci.gov.in/signup என்பதை கிளிக் செய்யவும்
பின்னர், அதில் உங்கள் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து, SEND OTP என்பதை கிளிக் செய்யவும்.
உங்களுடை செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதனைப் பதிவு செய்யவும்.
பின்னர், உங்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்யும்.
உங்களுக்கான ஒரு பாஸ்வேர்டு கொடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.
பின்னர் https://voters.eci.gov.in/login என்பதை கிளிக் செய்து லாகின் செய்யவும்.
உங்களுடைய செல்போன் எண், பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழையவும்.
அதில் "Download e-EPIC" என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொடுத்து சப்மிட் செய்தால் உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications