இதை மட்டும் பண்ணுங்க போதும்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்.. பணம் கொட்டும்.. நோட் பண்ணுங்க
சென்னை: மத்திய அரசால் பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்புத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்களுக்குச் சேமிக்க உதவுகிறது. இத்திட்டம் மூலம் சுமார் ரூ. 11,16,815 ஐ மிக எளிதாக சேமிக்க முடியும். இதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். இதற்கு சில முக்கியமான் வழிகள் இருக்கின்றன. அந்த வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம், குறிப்பாகப் பெண்களின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சந்திப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கு உறுதியான எதிர்காலத்தை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் சார்பாக, பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்தவுடன், கணக்கு குழந்தையின் பெயருக்கு மாற்றப்படும். மேலும், 15 ஆண்டுகள் வரை இதில் பணத்தைச் செலுத்த முடியும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை முழுமையாகப் பெறலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி அஞ்சல் நிலையத்திலோ அல்லது வங்கியிலோ கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும் மேலும் திருமணத்திற்கு முன்பு வரை பணம் செலுத்தலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் 8% வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நபர் மாதம் ரூ.2000 முதலீடு செய்தால், 21 வருட முடிவில் சுமார் ரூ.11.16 லட்சம் வரை பெறலாம். இந்தத் திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் இருப்பதால், பெற்றோர்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் சேமிப்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டம் உள்ளது. இதன் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமானத் திட்டமாகும். இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது.
ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையான வருமானத்தை உருவாக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.












Click it and Unblock the Notifications