கையில் உள்ள கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி! இதை மட்டும் செய்யுங்க.. இதற்கு உள்ள கண்டிஷன்கள் என்ன
சென்னை: உங்கள் கையில் கிழிந்த நோட்டை வைத்துக் கொண்டு மாற்ற முடியாமல் சிரமப்படுகிறீர்களா.. அதை எப்படி மாற்றலாம்.. அதில் கண்டிஷன்கள் எதாவது இருக்கிறதா என்பதை நாம் இதில் பார்க்கலாம்.
திடீரென நம்மிடம் எப்படியோ கிழிந்த அல்லது பழைய ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டது என்றால் அதை எப்படி மாற்ற வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.

அதேபோல வங்கிகளிலும் கூட இதுபோன்ற கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகளை வாங்கிக் கொள்வார்களா என்ற கவலை பலருக்கும் இருக்கும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி: கிழிந்த நோட்டுகளை நாடு முழுக்க இருக்கும் வங்கிகள் அனைத்தும் வாங்கிக் கொள்ளும். இருப்பினும், நாம் எவ்வளவு தொகைக்கு இதுபோல ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்து விதிகள் மாறுபடும்.
அழுக்கான நோட்டுகள்: அழுக்கான நோட்டுகள் என்பது வழக்கமான பயன்பாடு காரணமாக அழுக்காகிவிட்டதைக் குறிக்கும். பொதுவாக ஒரு நோட்டு கிழிந்து போனால் நாம் பசையை வைத்து ஓட்டுவோம். அதையும் அழுக்கான நோட்டுகள் என்றே குறிப்பிடுவார்கள். அதே நேரம் செலோடேப்பை வைத்து இதுபோன்ற நோட்டுகளை ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ரூபாய் நோட்டின் இரு பகுதிகளும் ஒரே நோட்டைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.. மிஸ்ஸிங் பகுதிகள் எதுவும் இருக்கக்கூடாது.
இந்த நோட்டுகளை வங்கி கவுண்டர்களில் கொடுத்து ரொக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.. ஆனால் பெரும்பாலான வங்கிகளில் நமது கையில் ரொக்கமாகத் தர மாட்டார்கள். வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைத்துவிடுவார்கள்.
சிதைந்த நோட்டுகள்: அடுத்துச் சிதைந்த நோட்டுகள். இதை Mutilated notes என்பார்கள். ஒரு நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்தாலோ அல்லது அதன் ஒரு பகுதி மிஸ் ஆகி இருந்தாலோ அது சிதைந்த நோட்டுகள் என்று அழைக்கப்படும். இதையும் நாம் வங்கிகளில் கொடுத்து எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.
ரூல்ஸ் என்ன: சரி ஒருவர் அதிகபட்சம் எத்தனை ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்... ஒரு நாளைக்கு ஒருவர் கிழிந்த நிலையில் இருக்கும் 20 நோட்டுகளை மாற்ற முடியும்.. இருப்பினும், அதன் மொத்த மதிப்பு 5,000 ரூபாய்க்கு குறைவாகவே இருக்க வேண்டும். இதை நாம் இலவசமாக வங்கி கவுண்ட்டர்களிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
5000 ரூபாய்க்கு மேல் என்றால் வங்கி ரசீதுகள் தேவை.. மேலும், இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணங்களும் வசூலிக்கப்படும். அதேநேரம் மாற்ற வேண்டிய தொகை ரூ.50,000-க்கும் மேல் என்றால் நீங்கள் உங்கள் அடையாள சான்றிதழ்களையும் கூட சமர்ப்பிக்க நேரிடலாம்.
கருகிய நோட்டுகள்: கிழிந்த நோட்டுகளில் கடைசியாக ஒரு வகை இருக்கிறது. அவை தான் மிக மிக மோசமான நிலையில் இருக்கும் நோட்டுகள். எரிந்த, கருகிய அல்லது மிகவும் கசங்கிய நிலையில் இருக்கும் நோட்டுகள் இந்த ரகத்தில் தான் வரும். இதுபோல இருக்கும் நோட்டுகளை பொதுவாக வங்கிகள் ஏற்றுக்கொள்ளாது.
இந்த நோட்டுகளை நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற முடியும். ரிசர்வ் வங்கியிடம் இந்த நோட்டுகளைச் சமர்ப்பித்தால் அவர்கள் ஆய்வு செய்து இந்த நோட்டுகளை மாற்றித் தருவார்கள்.
எப்படி: குறைவான நோட்டுகள் என்றால் ரிசர்வ் வங்கியின் நான்-செஸ்ட் கிளைகளில் கூட மாற்றிக் கொள்ளலாம். ஐந்து அல்லது அதற்குக் குறைவான சிதைவடைந்த நோட்டுகளை மாற்றுகிறீர்கள் என்றால் அதை நேரடியாக ரிசர்வ் வங்கி கவுண்ட்டரிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
விதிகள்: அதேநேரம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவது குறித்து அவர்கள் இறுதி முடிவை எடுக்க முடியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகள் சிதைவடைந்து இருந்தால்.. அவை அடுத்தகட்டமாக ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்குப் பணம் எப்போது கிடைக்கும் என்பது குறித்த ரசீதும் வழங்கப்படும். பொதுவாக 30 நாட்களில் உங்களுக்குப் பணம் வந்துவிடும். உங்கள் வங்கிக் கணக்கில் அந்த தொகை நேரடியாகச் செலுத்தப்படும்.
ஐந்துக்கும் மேற்பட்ட நோட்டுகள், அவற்றின் மதிப்பு ரூ. 5,000 வரை இருந்தால் அதை நீங்கள் ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைகளில் மட்டுமே மாற்ற முடியும். இந்த நோட்டுகளை நீங்கள் செஸ்ட் வங்கிகளுக்கு insured post மூலம் அனுப்பினால் போதும். அத்துடன் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் அனுப்ப வேண்டும். அதை ஆய்வு செய்து நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தப்படும். இதற்கு நீங்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல தேவையில்லை.
அதேநேரம் 5,000 ரூபாய்க்கு மேலான தொகையை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைக்குச் செல்ல வேண்டும். உங்களிடம் சில விவரங்களை வங்கி கேட்கலாம். நீங்கள் சமர்ப்பித்த நோட்டுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் 30 நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தப்படும்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications