மகளிர் உரிமை தொகைக்கு ஈஸியா விண்ணப்பிக்கலாம்.. அருகில் நடக்கும் முகாமை.. கண்டுபிடிப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த முகாம்கள் பல உங்களுடைய வீட்டிற்கு அருகிலேயே கூட நடக்கலாம். இதை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார். நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமிற்கு போனால் உங்கள் தேவைகளை உடனடியாக தீர்க்கும்படி எல்லா துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆதார் நம்பர், ரேஷன் கார்ட், மொபைல் நம்பர், பேங்க் பாஸ்புக் இதை மட்டும் கொண்டு வந்தால் போதும்.. இந்த முகாமில் எளிதாக ஒரு ரூபாய் செலவு பண்ணாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
மகளிர் உரிமை தொகை
அதெல்லாம் சரி இந்த முகாம் எங்கே நடக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று கேள்வி உள்ளதா? இதற்காக தமிழக அரசு https://ungaludanstalin.tn.gov.in/ என்ற வலைப்பக்கத்தை திறந்து உள்ளனர் . அதில் முகாம் விவரங்கள் என்ற பக்கத்தை கிளிக் செய்தால் போதும். உங்கள் ஏரியாவில் எந்த இடத்தில் முகாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் எளிதாக உங்களுக்கு அருகில் உள்ள முகாம்களை கண்டுபிடித்து விண்ணப்பம் செய்ய முடியும்.
மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடக்கின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதோடு 15ம் தேதி முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வீடுகளில் வழங்கப்படும். இதற்காக பல தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேரடியாக வீடுகளில் கூட வந்து உங்களிடம் விண்ணப்பங்களை கொடுப்பார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மட்டுமில்லாமல்.. பல துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகின்றனர். . நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு சேவைகள், இபி அட்டையில் பிரச்சனை, பிறப்பு சான்று, இறப்பு சான்று, திருமண சான்று, வீட்டு வரி பிரச்சனை, தொழில்துறை தொடர்பான பிரச்சனை, மாற்றுத்திறனாளிகள் சேவைகள் என்று எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகின்றனர்.
மகளிர் உரிமை தொகை யாருக்கு கிடைக்கும்?
1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர். திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ii. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
Ⅲ. வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.












Click it and Unblock the Notifications