உங்க வீட்டில் ஒன்றுக்கு மேல் பெண்கள் உள்ளனரா? மாதம் ரூ.1000 உரிமை தொகை பெறுவது எப்படி? இதை படிங்க
சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்கான முக்கியமான விளக்கம் ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

இந்த திட்டத்தின் கீழ் 21 வயதை தாண்டிய பெண்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் உங்கள் குடும்பம் கூட்டு குடும்பம். ஒரே ரேஷன் கார்டில் 2-3 பெண்கள் 21 வயதுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு திருமணமும் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.
இதில் யார் குடும்ப தலைவி என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
இவர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே தனி தனியாக பணம் கொடுக்கப்படும். ஒரே ரேஷன் கார்டில் பணம் தரப்படாது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு மட்டுமே பணம் தரப்படும்.
குடும்ப தலைவிகள்: இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார்.. குடும்ப தலைவிகள் என்ற தகுதி பெறுபவர்கள் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
* ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண்
குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
* குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி, குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
*திருமணம் ஆகாத தனித்த பெண்கள்; கைம்பெண்கள் & திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்ப தலைவிகளாகக் கருதப்படுவர்.
*அதேபோல் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்

திருநங்கைகள்: திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருநங்கைகள் குடும்ப தலைவிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது மிகப்பெரிய சமூக நீதி திட்டமாக, அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல வீடுகளில் திருநங்கைகள் சேர்ந்து குழுவாக வசிக்கிறார்கள். இதில் சிலர் ஒரே குடும்பமாக பதிவு செய்து ரேஷன் அட்டைகளும் பெறுகிறார்கள். சிலர் தனி ரேஷன் அட்டைகள் பெறுகிறார்கள். இதனால் இவர்களும் இப்போது ரூ. 1000 பெறுவது எளிதாகி உள்ளது. சமூக நீதி மிக்க இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications