பான் 2.O அட்டையை எப்படி பெறுவது? விண்ணப்பிக்க வேண்டுமா? கட்டணம் என்ன?
சென்னை: மத்திய அரசு புதிய கியூஆர் கோட் கொண்ட புதிய பான் கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதை எப்படிப் பெறுவது? அதற்கு தனியே விண்ணப்பிக்க வேண்டுமா என்பதைப் பார்க்கலாம்.
நவீனத் தொழில்நுட்பங்கள் மாறும் போது அதற்கு ஏற்ப தனிநபர் சார்ந்த ஆவணங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதன்படி மத்திய அரசு இதுவரை புழக்கத்திலிருந்து வரும் பான் கார்டு முறையை அப்டேட் செய்ய முடிவு செய்திருக்கிறது. அதற்கான அனுமதியையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆகவே, வரும் காலங்களில் புதியதாக பான் 2.ஓ என்ற புதிய அட்டையை வழங்க இருக்கிறது. அது என்ன பான் 2.ஓ என்று சிலர் கேட்கலாம்.

தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த நிதி பரிவர்த்தனை சம்பந்தமான தரவுகளைக் கண்காணிக்கவேண்டி மத்திய வருமானவரித்துறை பான் கார்டு முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் ஒருவரின் நிதி பரிவர்த்தனையை அல்லது வருமானவரி செலுத்துபவர்களின் வருமானத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆகவே, வரி செலுத்துபவர்கள் கட்டாயம் பான் கார்டு வைத்திருப்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால், இப்போது எல்லாம் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குக்கூட பான் கார்டு என்பது அவசியமாகி இருக்கிறது. அந்த அட்டையில் இப்போது கூடுதலான சில விசயங்களை மத்திய அரசு இணைக்க முடிவு செய்துள்ளது. அதாவது இதில் கியூஆர் கோட் முறையைக் கொண்டுவர உள்ளது. இப்போது பல பரிவர்த்தனைகள் இந்த கியூஆர் மூலமே நடைபெறுகின்றன. சாதாரணமாக ஜிபே, கூகுள்பே போன பணப் பரிவர்த்தனைகூட கியூஆர் சிஸ்டம் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், பல ஆண்டுகள் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பான் அட்டைகளில் கியூஆர் கோட் என்பது இல்லை.
ஆகவே அந்த வசதியை புதியதாக அப்டேட் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்வரை தற்போது உள்ள பழைய அட்டைகள் செல்லும். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவரும் இந்த அட்டையைப் புதுப்பித்துக் கொள்வது கட்டாயம். இப்போது உள்ள அட்டையில் 10 இலக்க எண்கள்தான் குறியீடாக இது வருகிறது. அது இனி கியூஆர் கோட் முறைக்கு மாற்றப்படும். அதன் மூலம் தனி நபர் சார்ந்த ஆவணங்கள் கூடுதலாகப் பாதுகாக்க முடியும். இதற்காக ரூ. 1435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக பலரும் இந்த அட்டையைப் பெற வேண்டும் என எந்த அறிவிப்பையும் வருமானவரித்துறை வெளியிடவில்லை. இப்போது உள்ள பயனாளிகள் அனைவருக்கும் உரியமுறையில் புதிய அட்டை கிடைக்க அரசு ஏற்படு செய்யும். அதுவரை பழைய அட்டையைப் பயன்படுதற்கு எந்தத் தடையும் இல்லை. அதேபோல் எந்த இறுதி தேதியையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் மாற்ற வேண்டும் என்ற பதற்றம் மக்களுக்குத் தேவையில்லை.
பெயர் மாற்றம் வேறு ஏதேனும் புதுப்பித்தல் தொடர்பான அப்டேட் செய்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், ஒருவர் புதிய அட்டையைப் பெறுவதற்கு மட்டும் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அஞ்சலில் அனுப்ப ரூ.15 என அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் இந்தியாவுக்கு உள் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். யாரேனும் வெளிநாட்டில் தங்கி இருந்தால், அவர்களின் முகவரிக்கு அனுப்ப அதற்குக் கட்டணத்தில் மாறுதல்கள் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியூர்ஆர் கோட் கொண்ட புதிய அட்டையைப் பெற யாரும் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அந்தப் புதிய அட்டைகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. தயாரிக்கப்பட்டவுடன் ஒருவர் ஏற்கெனவே பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இது பற்றிய செய்தி அனுப்பப்படும். அதன்படி புதிய கியூர்ஆர் கொண்ட அட்டை இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும். இந்த கியூஆர் கோட் முறையிலான அப்டேட் எதற்கு என்றால் சைபர் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குத்தான்.
என்எஸ்டிஎல் இணையதளத்திலிருந்து இதுவரை பான் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிப்பதற்காகப் படிநிலைகள்:
படி 1: இந்த இணைப்பிற்குச் செல்லவும்: https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html
படி 2: வலைப்பக்கத்தில், பின்வரும் தகவலை உள்ளிடவும்: பான், ஆதார் (தனிநபருக்கு மட்டும்), பிறந்த தேதி.












Click it and Unblock the Notifications