பழைய வீட்டிற்கு பட்டா வாங்குவது எப்படி.. பட்டா இல்லாத வீட்டை புதுப்பித்து கட்டினால் பெரிய சிக்கல்
சென்னை: பலர் அந்த காலத்தில் வெறும் பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு வீடு கட்டியிருப்பார்கள். அதுவும் பரம்பரை பரம்பரையாக குடியிருந்து வந்த பூர்வீக இடமாக இருக்கும். இதேபோல் சிலர் 30, 40 வருடம் முன்பு வெறும் பத்திரப்பதிவு மட்டும் செய்து வீடு கட்டியிருப்பார்கள். அப்படிப்பட்ட வீட்டிற்கு பட்டா இன்னும் வாங்காமலேயே வசிக்கிறார்கள். பட்டா இல்லாத பழைய வீட்டை புதுப்பித்து புதிய வீடு கட்டினால் பின்னாளில் பெரிய சிக்கல்கள் வரும்.. பழைய வீட்டிற்கு பட்டா வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.
அந்த காலத்தில் பட்டா, பத்திரப்பதிவு என எதுவுமே இல்லாமேயே வெறும் வாய்கிராமத்தில் ஆண்டு ஆண்டுகாலமாக விவசாயம் செய்து வந்தார்கள் மக்கள். அதேநேரம் காலப்போக்கில் வெறும் பத்திப்பதிவு மட்டும் செய்துவிட்டு, அப்படியே வீடு கட்டி குடியேறினார்கள். குறிப்பாக நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியேறி பலர், பட்டா வாங்க ஆர்வம் காட்டவில்லை. அப்படியே வீடுகளை புதுப்பித்து கட்டி ஆண்டாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இன்றைய சூழலில் இன்றும் பலர் பட்டா வாங்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் அப்படியே வசித்து வருவதும் உண்டு.

தாத்தாவின் பெயரில் பத்திப்பதிவு
இந்த சூழலில் சில வீடுகள் தாத்தாவின் தாத்தா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கும். சில வீடுகளில் தாத்தாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கும். அவர் தற்போது உயிருடனே இருக்கமாட்டார். அப்படிப்பட்ட வீடுகளை இடித்து புதுப்பித்து கட்டும் போது கட்டாயம் பட்டா வாங்கி கொள்ளுங்கள். பத்திரப்பதிவு என்பது ஒரு உரிமை என்றாலும், பட்டா வாங்கினால் தான் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையை நீங்கள் நீருபிக்க முடியும். எனவே பட்டா இல்லாத நிலையில் புது வீடு கட்ட முயற்சித்தால் பல்வேறு சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. அதுபற்ற பார்ப்போம்.
கட்டுமான அனுமதி பெற முடியாது
எத்தனை வருடம் வசித்தாலும், நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாவிட்டால், நீங்கள் கட்டும் புதிய வீடு சட்டப்படி நீங்கள் உரிமையாளராக இருக்க முடியாது. அதேபோல் இன்றைய சூழலில் பட்டா இல்லாவிட்டால் கட்டுமான அனுமதியும் பெற முடியாது. கட்டுமான அனுமதி இல்லாமல் தான் வீடு கட்டுவீர்கள்.
நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது
இப்படியான சூழலில் நீங்கள் வசிக்கும் நிலம் உண்மையில் வேறு யாருக்காவது சொந்தமாக இருக்கும் பட்சத்தில், அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர் உங்கள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் பல வருடங்களாக அந்த வீட்டிலேயே வசித்திருந்தாலும், பட்டா இல்லாவிட்டால் சட்டப்படி நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கவே முடியாது.

ஆவணங்கள் வேண்டும்
ஒருவேளை நீங்கள் கட்டிய புதிய வீட்டை எதிர்காலத்தில் விற்க வேண்டிய நிலை வரலாம். அப்போது பட்டா இல்லாமல் போனால், அதை வாங்குபவர்கள் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். பட்டா இல்லாமல் வீட்டை விற்பது அல்லது வாங்குவது மிக ஆபத்தாக மாறிவிடும்.
அதேபோல் நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர் என்பதை நிரூபிக்கும் பட்டா இருந்தால் மட்டுமே புதிய வீடு கட்டுவதற்கு அல்லது பழைய வீட்டைப் புதுப்பிக்க வங்கிகள் உங்களுக்கு கடன் தரும். பட்டா இல்லாத வீட்டிற்கு கடன் தருவதற்கு வாய்ப்பே இல்லை. அதேபோல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை உங்கள் பெயரில் மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக பட்டா வேண்டும்.
பழைய வீட்டிற்கு பட்டா வாங்குவது எப்படி
பல வருடமாக பரம்பரை பரம்பரையாக குடியிருந்தால் பட்டா வாங்காமல் இருக்கிறீர்கள் என்றால், முதலில் பட்டா இல்லையா இருக்கா என்பைத பெற்றோர்களிடம் உறுதி செய்யுங்கள். பட்டா இல்லை, பத்திரப்பதிவு மட்டும் தான் செய்தோம் என்று சொன்னால், தாமதிக்காமல், நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு உங்கள் பெயரில் பட்டா பெற முடியுமா என்பதை அறிய, தாசில்தார் அலுவலகம் செல்லுங்கள். அங்கு சரியான ஆலோசனை தருவார்கள்.
தாசில்தார் ஆய்வு
பல தலைமுறையாக வசிப்பவர்கள் வாரிசு அடிப்படையில் உரிமை கோரினால், வாரிசுச் சான்றிதழ்கள் தேவைப்பபடும். அதேபோல் பல ஆண்டுகளாக நீங்கள் மட்டுமே அங்கு வசிக்கிறீர்கள் என்பதை சட்ட ரீதியாக நிரூபிக்கக, பழைய வீட்டு வரி ரசீதுகள், மின்சார பில், குடிநீர் இணைப்பு ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்கலாம். இந்த சூழலில் தாசில்தார் நேரடியாக நிலத்தை புல ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரிபார்த்து, யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், உங்கள் பெயரில் பட்டா வழங்குவார். இந்த பட்டா 'நகர நில அளவை மற்றும் நில ஆவணத் திட்டத்தின் (TSLR) கீழ் உள்ள பட்டாவாக இருக்கும்.அதேநேரம் உங்கள் பழைய வீடு அல்லது நிலம் ஏதாவது அரசு புறம்போக்கு நிலத்திலோ அல்லது வழக்கு நிலத்திலோ இருந்தால், பட்டா கிடைப்பது மிகவும் கடினம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications