நெட் தீர்ந்துபோச்சா? உடனே “டேட்டா லோன்” கிடைக்கும்! ஏர்டெல் வழங்கும் அற்புதமான வசதி! எப்படி பெறுவது?
சென்னை: போனில் முக்கியமான வேலையில் இருக்கும்போது, அல்லது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென நெட் பேக்கின் அன்றைய லிமிட் முடிந்துவிட்டால் அது எவ்வளவு வேதனைத் தரும் என்பது நமக்குத் தெரியும். அப்படியான சூழலில் 1 ஜிபி டேட்டா கடன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைப்போம். ஏர்டெல், உண்மையிலேயே கடன் தருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தமது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா கடன் வசதியை வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் இதை 'எமர்ஜென்சி டேட்டா லோன்' வசதி என்று அழைக்கிறது. ரீசார்ஜ் செய்யாமல் அவசரமாக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு முக்கியமான வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் இருந்தால் அல்லது ஒரு முக்கியமான வேலையை ஆன்லைன் வாயிலாக முடிக்க வேண்டியிருக்கும்போது, உங்கள் டேட்டா திடீரென தீர்ந்து போகலாம். அந்த சூழ்நிலையில், உங்களால் உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை இருந்தால், ஏர்டெல் டேட்டா லோன் உங்களுக்கு உதவும்.
ஏர்டெல் டேட்டா லோன் மூலம், ஒரு வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்யாமல் உடனடியாக 1 GB டேட்டாவைப் பெறலாம். இந்த 1 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதாவது நள்ளிரவு 12 மணிக்கு அது காலாவதியாகிவிடும். டேட்டா லோன் பெற, உங்கள் ஏர்டெல் மொபைல் நம்பர் செயலில் இருக்க வேண்டும்.
உங்கள் ஏர்டெல் மொபைலில் டேட்டா பேலன்ஸ் இல்லாமலோ அல்லது தினசரி டேட்டா பேக் தீர்ந்து விட்டாலோ, நீங்கள் எமர்ஜென்சி டேட்டா லோன் பெறலாம். டேட்டா லோன் பெறுவதற்கு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், இது லோன் என்பதால் நீங்கள் பின்னர் ரீசார்ஜ் செய்யும்போது, டேட்டா லோனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.19, ரூ.29, ரூ.49, ரூ.58, ரூ.65, ரூ.98, ரூ.148, ரூ.149 மற்றும் ரூ.301 பேக்குகளை ரீசார்ஜ் செய்யும்போது, ஏற்கனவே நீங்கள் பெற்ற 1 ஜிபி டேட்டா கடன் திரும்பப் பெறப்படும். ஏர்டெல் டேட்டா லோன் வசதி தற்போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
உங்கள் ஏர்டெல் மொபைல் போனில், *141*567# அல்லது *144*10# அல்லது *121*567# -ஐ டயல் செய்யவும். உங்கள் போனில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். "1" ஐ அழுத்தி உங்கள் டேட்டா லோனை உறுதிப்படுத்தவும். உடனடியாக உங்களுக்கு டேட்டா லோன் கிடைத்துவிடும். அல்லது நீங்கள் ஏர்டெல் லோன் எண் 52141ஐ டயல் செய்து, வழிமுறைகளைப் பின்பற்றி டேட்டா கடனைப் பெறலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications