மகளிர் உரிமை தொகை + தங்கம்.. ரூ.1000ஐ வைத்து இவ்வளவு லாபம் பார்க்க முடியுமா? அட சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக மாதம் மாதம் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை மூலம் நீங்கள் தங்கத்தில் ஸ்மார்ட்டாக முதலீடு செய்து பல ஆயிரம் சேமிக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.
தங்க நகை சீட்டு திட்டங்கள் சேமிப்பு திட்டங்கள் என்று பிரபல நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் சேரலாம். பிரபலமாகி இருக்கும் முறையாக பதவி செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டும் சீட்டு போடவும். இதில் மாதம் ரூ.1000ல் இருந்தே சேமிக்கும் திட்டங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாதம் நீங்கள் பணம் கட்டும் நாளில் எந்த தொகை இருந்ததோ அந்த தொகைக்கு தங்கத்தை பதிவு செய்ய முடியும். உதாரணமாக இந்த மாதம் இன்று தங்கம் வாங்க பதிவு செய்தால் இந்த மாதத்திற்கான தங்கம் இன்றைய நாள் விலையில் பதவி செய்யப்படும்.
அதாவது இன்று ரூ.1000 கட்டினால் அந்த தொகைக்கு உங்களால் எவ்வளவு தங்கம் இன்று வாங்க முடியுமோ அந்த தங்கம் உங்கள் கணக்கில் வைக்கப்படும்.
இதனால் ஒரு வருடம் கழித்து தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தாலும் நீங்கள் இன்று வாங்கிய தங்கம் இன்றைய விலையிலேயே பதிவாகி இருக்கும். தங்கம் விலை ஏற்றத்தை பெரிய அளவில் சமாளிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை எப்போது குறைகிறதோ அப்போது பணம் கட்டி அந்த மாதத்திற்கான தங்கத்தை உங்கள் கணக்கில் வரவைக்கலாம் .
இதில் 15 மாதங்கள் மகளிர் உரிமை தொகை பணத்தை, அதாவது 15 ஆயிரம் ரூபாயை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது போன்ற திட்டங்களுக்கு தங்க கடை நிறுவனங்கள் செய்கூலி, சேதாரம் இல்லாமல் வழங்கும், 10% கூடுதல் டிஸ்கவுண்ட் அல்லது கூடுதலாக 2000 - 4500 ரூபாய் வரை பணம் வழங்கும்.
பல நகை நிறுவனங்கள் இந்த சலுகைகளை வழங்குகின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 18 ஆயிரம் ரூபாய்க்கு.. அதாவது இரண்டரை கிராம் தங்கம் வரை எளிதாக வாங்க முடியும். மகளிர் உரிமை தொகை திட்ட பணத்தை இது போல முதலீட்ஸ் செய்தும் நீங்கள் எளிதாக தங்கம் ஈட்ட முடியும்.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தில் இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறை விரிவாக்கத்தின் போது புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ரூ.1000 பணம் பெறுவதற்காக இவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெறுகிறார்கள் என்று கூறி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுக்க இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications