ரெடியா இருங்க.. பெண்களுக்கு தமிழக அரசு தரும் ரூ.50000.. யார் எல்லாம் பெற முடியும்? எப்படி பெறுவது?
சென்னை: பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பெற தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடுத்தகட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டத்திற்கு இடையே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.

விண்ணப்பங்கள்:
இந்த திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ. 50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்காக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 2 பெண்கள் குழந்தைகள் திட்டத்திற்கான ஆவணங்கள் சரி பார்ப்பு பணிகள் நடக்க உள்ளன.
திட்டம் 1: அதன்படி முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளநிலை மேற்கொள்ள பொறியியல் ஊக்குவிக்க பணம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் பட்டப்படிப்புகளை தொடர்ந்து பயில்வதற்கும் ஏதுவாகவும் அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-24- கல்வியாண்டில் 24 மாணாக்கர்களுக்கு நிதி உதவித் தொகையான ரூ.50,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்கும் பயிலும் அனைத்து கல்விக் கட்டணத்தை 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அரசால் தள்ளுபடி செய்து அரசு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது.
மேலும் 2010-11-ஆம் கல்வியாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்புப் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களின் பெற்றோரின் நிதிச்சுமை பெருமளவில் குறைந்துள்ளது, என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 2 பெண்கள் குழந்தைகள் திட்டத்திற்கான ஆவணங்கள் சரி பார்ப்பு பணிகள் நடக்க உள்ளன. அடுத்த சில நாட்களில் இதற்கான பணிகள் நடக்க உள்ளன.,
கூடுதல் திட்டங்கள்; இது போக புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications