தகிக்கும் வெப்ப அலை.. கண் பார்வையே கூட பறிபோகும்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பாதுகாப்பது எப்படி
சென்னை: கோடைக் காலத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், கண்கள் வெப்பத்தால் எளிதாகப் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்ன செய்தால் கண்களைப் பாதுகாக்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.
எப்போதும் இந்தியாவில் மே மாதம் தான் கோடைக் கால வெயில் உச்சத்தில் இருக்கும். இன்னும் மே மாதம் தொடங்கவில்லை என்ற போதிலும், இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப வெயிலும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வெப்ப அலை: ஏற்கனவே, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் வரை சென்றுவிட்டது. மற்ற மாநிலங்களிலும் கூட அசால்டாக வெப்பம் 40 டிகிரியை தாண்டிவிட்டது. அவ்வளவு ஏன் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் கூட வெப்பம் 2 முதல் 3 டிகிரி வரை கூடுதலாக வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏப்ரல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குளிர், மழையை விட கோடைக் காலத்தைச் சமாளிப்பது கடினம். உடல் ரீதியாக இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கடந்தாண்டே இதுபோன்ற வெப்ப அலை ஏற்பட்டதன் காரணமாக சில மரணங்களும் கூட பதிவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2017ஆம் ஆண்டு வறட்சி மிக மோசமாக இருந்தது. தமிழக அரசே வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது. இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கண்களில் பாதிப்பு: இதற்கிடையே அடுத்து வரும் நாட்களுக்கு வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது அது நமது கண்களை மிக எளிதாகப் பாதிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் கண்களைக் கூடுதல் அக்கறை மற்றும் கவனிப்புடன் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பம் என்பது கண்களுக்கு அதிகபட்ச தீங்கை ஏற்படுத்தும். இது கான்ஜுன்க்டிவிடிஸ், வறண்ட கண்கள், ஸ்டை மற்றும் கண் அலர்ஜி என்று பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் படுவதால் கண்புரை மற்றும் விழித்திரை பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. கண்களில் லேசான அரிப்பு மற்றும் கண் சிவத்தல் முதல் கடுமையான நீர் வடிதல் மற்றும் வீக்கம் வரை பல விதமான அலர்ஜிக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. சில நேரங்களில் பார்வை இழப்பை ஏற்படுத்தும் மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் புற்றுநோய் கூட அதிக வெப்பத்தால் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
வைரல் கான்ஜுன்க்டிவிடிஸ்: கோடைக் காலத்தில் ஏற்படும் பொதுவான கண் பிரச்சனை இதுவாகும்.. கண் சிவத்தல், நீர் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும், கண் மேலும் மோசமாவதைத் தவிர்க்கவும் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சுத்தமான தண்ணீரில் கைகளையும் கண்களையும் அடிக்கடி கழுவ வேண்டும். மேலும், இது எளிதாகப் பரவும் என்பதால், கைக்குட்டை அல்லது துண்டுகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். முதலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சினை சில நாட்களைக் கடந்தும் தொடர்ந்தால் மருத்துவர்களிடம் செல்லுங்கள்.
ஸ்டை: இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும்.. இது ஒன்று அல்லது இரண்டு கண் இமைகளிலும் சிறிய வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்ணில், வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் இதன் அறிகுறிகளாகும். இது குழந்தைகள் மத்தியில் அதிகம் ஏற்படும்.
கண் வறட்சி: அதிக வெப்பநிலை, மின்விசிறி, ஏசி பயன்படு கோடைக் காலத்தில் கண் வறட்சியை எளிதாக ஏற்படுத்தும். கண் சிவத்தல், நீர் வடிதல், புண் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.. அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப்களை பார்த்துக் கொண்டிருந்தால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
கண்கள் மிகவும் சென்சிட்டிவான பகுதி என்பதால் கண் ஒவ்வாமை ஏற்படும். கண் சிவத்தல், அரிப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இதன் நமது அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும்.

எப்படி தடுக்கலாம்: கண்களை நாம் சுத்தமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். காண்டாக்ட் லென்ஸ்களை தொடும் முன் கைகளைக் கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே செல்லும் போது கண்களை பராமரிக்கக் கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். அது உங்கள் கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உவும். மேலும், யுவிஏ மற்றும் யுவிபி ஆகிய மோசமான கதிர்களில் இருந்தும் நமது கண்களைப் பாதுகாக்கும்.
தண்ணீர் அதிகம் குடியுங்கள். நீரிழப்பு என்பது கோடையில் பொதுவாக அதிகம் ஏற்படும்.. இது உங்கள் உடலின் கண்ணீரை உருவாக்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது வெளியே செல்லும் போது அலர்ஜிகள் ஏற்படுவதை தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை எடுங்கள் சன்கிளாஸ் அணிவதும், முகம் கழுவுவதும் ஆகிய இரண்டும் நமக்கு உதவும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications