பட்டா, பத்திரம் இல்லாமல் நகரங்களில் நிலங்களின் சர்வே எண்ணை எப்படி காண்பது? அரசுக்கு கோரிக்கை
சென்னை: பட்டா, பத்திரங்கள் இல்லாமல் நகரங்களில் வீடு-நிலத்திற்கான சர்வே எண்ணை எளிதாக அறிந்து கொள்ள நகர மாஸ்டர் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராமங்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்த வில்லேஜ் மாஸ்டர் வசதியை பலரும் பாராட்டியுள்ளனர்.
நீங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றால், அந்த இடம் யாருக்கும் சொந்தம் என்பதை முன்பு அறிய முடியாது. சொத்தின் அடையாளத்தை அறிய வேண்டும் என்றால், அதற்கு அரசின் வருவாய் பதிவேட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சர்வே எண்ணும், அதன் உட்பிரிவு எண்ணும் வேண்டும்.

அதை வைத்துதான் நிலம் மற்றும் வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை அறிய முடியும். இந்த சர்வே எண்ணை நாம் நமது பதிவு பத்திரங்கள் அல்லது பட்டா ஆவணங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும். தற்போது வரை சர்வே எண் இல்லாவிட்டால், நில விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. இந்த சர்வே எண்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் , மோசடிகள் அதிகமாகவே நடக்கிறது.. இதற்கு அரசு எவ்வளவு சட்டம் போட்டாலும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுவதும், பின்னர் சிறை செல்வதுமாக இருக்கிறார்கள்.
நிலத்தை விற்பனைக்கு காண்பிக்கும் போது, வேறு ஒரு சர்வே எண்ணை ஏமாற்றி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். இதனால் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம், போலீஸ் என அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் உள்ளது, அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களையும் கிராம மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தனி இணையதள வசதியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது..
அதாவது தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் https://tngis.tn.gov.in/apps/village- dashboard/படம்: என்ற வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக எளிமையாக அறிய முடியும். . பின்னர் அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறியலாம்.
தற்போது இந்த வில்ஜேஜ் மாஸ்டர் இணையத்தில் கிராமங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களின் சர்வே எண்ணை மட்டுமே தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட தமிழகத்தில் உள்ள நகர்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை. கிராமப்புறங்களில் அரசு அறிமுகம் செய்துள்ள வில்லேஜ் மாஸ்டர் வசதியை நகர்ப்புறங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி செய்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏனெனில் தற்போதைய நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகள் உள்பட நகர்ப்புறங்களில் நில மோசடி தொடர்பான அதிக வழக்குகள் இருக்கிறது. எனவே அரசின் வசதிகள் நகர்ப்புறங்களுக்கு கண்டிப்பாக தேவை.
தமிழககத்தில் மட்டும் பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் இருக்கிறது. அதில் வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் இப்போது மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண்பிக்கப்படுகிறது. சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரில் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்களின் விவரங்களையும் எளிதாக அறிய முடியும்.
தற்போதைய நிலையில் வில்லேஜ் மாஸ்டருக்கு என்று அரசு தனி ஆப் கொண்டுவர வேண்டும். கூகுள் மேப் மூலம் எங்கு நின்றாலும் ஜி.பி.எஸ். மூலம் எளிதாக அறிந்து சர்வே எண்ணை அறியும் வகையில் அதை அப்டேட் செய்ய வேண்டும் என்றும்.. இதன் மூலம் வேறு ஒருநபரின் இடத்தை இன்னொருவரின் இடம் என்று சொல்லி ஏமாற்ற முடியாது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அரசு நிலங்கள், கோவில் நிலங்கள், நீர் நிலை மற்றும் வன பகுதிகள் நிலங்கள் ஆகியவற்றில் போலி விற்பனையை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அந்த சர்வே எண்கள் விற்பனைக்கு தடை போட்டிருப்பதை அறியும் வகையில் ஆப்பினை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications