மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்வது எப்படி? முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான களப்பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கு இடையே மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை எளிதாக பின்வரும் வழியில் அறிய முடியும். இந்த திட்டத்தின் இணையதளமான பக்கத்திற்குச் சென்றால், இரண்டு முக்கியப் பிரிவுகளைக் காணலாம்: "புதிய முகாம்களின் விவரங்கள்" மற்றும் "உங்கள் மனுவின் நிலை".

Tamil Nadu Government Notification magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை

இதில், "உங்கள் மனுவின் நிலை" என்ற பிரிவைத் தேர்வு செய்தால், அது தமிழக முதலமைச்சரின் உதவி மைய இணையதளமான பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்தப் பக்கத்தில் முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் "பதிவுசெய்" (Register) என்பதைச் கிளிக் செய்து, தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து கணக்கைத் தொடங்க வேண்டும்.

பதிவுசெய்த பிறகு, பயனர்களுக்கு இரண்டு தேர்வுகள் ஆங்கிலத்தில் காண்பிக்கப்படும்: "குறையை கண்காணி" (Track Grievance) மற்றும் "குறையை பதிவுசெய்" (File a Grievance). இதில், "குறையை கண்காணி" என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் பதிவுசெய்த அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.

மகளிர் உரிமை தொகை - விண்ணப்பம்

உள்நுழைந்தவுடன், நீங்கள் சமர்ப்பித்த மனுவின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதை இதன்மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஏற்கனவே கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான களப்பணி தற்போது நடந்து வருகிறது.

அதாவது கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் முறை பயனாளிகள் சேர்க்கப்பட்ட போதும், பின்னர் விரிவாக்கப்பட்ட போதும் பயனாளிகளை ஆய்வு செய்ய களப்பணி நடத்தப்பட்டது. அதேபோல் இந்த முறையும் நடத்தப்படும். அதாவது பயனாளிகள் கொடுத்த விவரங்கள், விலாசம் சரியா, பயனாளி இருப்பது உண்மையா, வங்கி விவரங்கள் உண்மையா என்ற ஆய்வுகள் எல்லாம் நடத்தப்படும். அதன்பின்பே முடிவு அறிவிக்கப்படும்.

தீபாவளிக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கான அறிவிப்பு தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வரும் விண்ணப்பங்களுக்கான முதல் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பரிசாக அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்டமாக பயனாளிகளுக்குப் பணம் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைந்தது. முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் பதில்கள் கிடைத்திருக்க வேண்டும். எனினும், அவர்களுக்கான பதில்கள் இன்னும் அனுப்பப்படவில்லை. பெரும்பாலும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாகவே அவர்கள் பதில்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+