ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
சென்னை: உங்கள் வீட்டில் ஏசியை பயன்படுத்தினால் நிச்சயம் ஃபேன் போடாதீர்கள் என ஏசி மெக்கானிக்குகள் அறிவுறுத்துகிறார்கள். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளனர்.
கோடை வெப்பம் ஆங்காங்கே தனல் போல் தகித்து வரும் நிலையில் எல்லா வீடுகளிலும் ஃபேன் போல் சர்வ சாதாரணமாக ஏசி ஓடி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கரண்ட் பில் பற்றிய கவலை இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு கரண்ட் பில்தானே கட்டிக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

இப்படியான சூழலில் சில இடங்களில் ஏசி இயந்திரம் வெடித்து கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம் வீடுகளில் ஏசி இயந்திரம் வெடிக்காமல் இருக்க என்ன வழி என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஏசி பழுது நீக்கம் செய்யும் டெக்னீசியன்கள் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ஏசிக்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் குறைந்த வோல்டேஜ், அதிக வோல்டேஜ். அம்பத்தூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வோல்டேஜில் கொஞ்சம் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது.
அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்பாவது எல்லாமே பொதுவாக நடக்கும் விஷயம்தான். அப்போது நாம் ஏசி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென கரண்ட் போகிறது. ஏசியும் ஆஃப் ஆகிறது. சிறிது நேரத்தில் கரண்ட் வந்துவிட்டதும் நாம் ஏசியை ஆன் செய்கிறோம். அந்த சமயத்தில் ஹை வோல்டேஜ் அல்லது லோ வோல்டேஜ் வர வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த வோல்டேஜ் குறித்தெல்லாம் பயனாளிகளுக்கு தெரியாது. இது மின்சாதன பொருட்களை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால் சாதாரண மக்களுக்கு வோல்டேஜ் குறித்தெல்லாம் தெரியாது. எனவே வீட்டில் ஏசி என இருந்தால் ஸ்டெபிலைசர் என்பதை கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்டெபிலைசர்தான் நமக்கு தேவையான மின்சாரத்தை மாற்றி கொடுக்கும். ஹை வோல்டேஜ் வந்தாலும் அது நமக்கு தேவையான கரண்ட்டை மட்டுமே கொடுக்கும். எனவே ஸ்டெபிலைசர் இல்லாமல் ஏசியை யூஸ் செய்யாதீர்கள். கேஸ் லீக்கேஜ் என பார்க்கும் போது ஆர் 22 என்ற கெமிக்கலால் ஓசோனில் பிரச்சினை ஏற்படுவதால் அது தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஆர் 32 என்ற கேஸைத்தான் எல்லா ஏசி நிறுவனங்களும் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் ஏசி வாங்கியதுமே மாட்டி விட எண்ணுகிறார்கள். ஒரு எலக்ட்ரீஷியனை வைத்துதான் இதை செய்ய வேண்டும். அது போல் ரொம்ப நாளாக ஏசி போடாமல் இருந்தால் உடனே அதை போடக் கூடாது. ஏசி மெக்கானிக்கை வைத்து சர்வீஸ் செய்துதான் போட வேண்டும்.
ஃபேனை போட்டுக் கொண்டு ஏசி போடக் கூடாது. அதாவது ஃபேன் போட்டால் காற்று ஒரே பக்கத்தில் சுற்றும். ஏசியானது அறையில் இருக்கும் காற்றை எடுத்துக் கொள்ளும் போது தூசையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். இதனால் 4 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டிய ஏசியை 2 மாதங்களில் சர்வீஸ் செய்ய வேண்டியதாகிவிடும். இவ்வாறு அந்த ஏசி மெக்கானிக்குகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications