ரேஷன் கடையில் பாமாயில் வாங்க தயக்கமா?.. வீட்டிலேயே சுத்தப்படுத்த ஈஸி டிப்ஸ்! இனி விட மாட்டீங்க!
சென்னை: ரேஷன் கடையில் வாங்கும் பாமாயிலை எப்படி சுத்திகரிப்பது என்பது குறித்து பார்ப்போம். இதை வீட்டிலேயே சுத்தப்படுத்தலாம். மிகவும் எளிய வழியில்!
ரேஷனில் பாமாயில் ஒரு பாக்கெட் விலை ரூ 30 க்கு கொடுக்கப்படுகிறது. இந்த பாமாயில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் வாங்கி பயன்படுத்துவதே இல்லை.

இவற்றை விற்று விடுகிறார்கள். இல்லாவிட்டால் தாளிப்பதற்கு, அப்பளம், வடை சுட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிடுகிறார்கள். காரணம் இதை சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.
இது மட்டுமல்லாமல் இதில் நிறைய கொழுப்பும் இருக்கின்றன. கொழுப்புகள் நம் உடலுக்கு தீமை விளைவிக்கும், உடல் எடையை கூட்டும், கொலஸ்டிராலை அதிகரிக்கும். இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். வெறும் ரூ 30 க்கு பாமாயிலை வாங்கி இத்தனை நோய்களை ஏன் இலவசமாக பெறுவானேன் என நினைத்து பொதுமக்கள் இதை தவிர்க்கிறார்கள்.
மேலும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் தலைச்சுற்றல், மயக்கம் வரும் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாமாயிலை வீட்டிலேயே சுத்திகரித்து அதில் உள்ள பித்தத்தை போக்கிவிடலாம் என்கிறார்கள். இதற்கு முதலில் மிதமான தீயில் இரும்பு கடாயை வைத்து அதில் வாங்கி வந்த பாமாயிலை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாகும் போது கொட்டை இல்லாத புளி, கல் உப்பு, சின்ன துண்டு இஞ்சி ஆகியவை இந்த முறை்கு தேவைப்படுகிறது.
இதில் புளியை உருட்டிக் கொண்டு அதன் நடுவே உப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புளியை வடை போல் தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சியை போட வேண்டும். இவற்றையெல்லாம் போட்டு 5 முதல் 10 நிமிடங்களை வரை அப்படியே கொதிக்கவிடவும்.
புளி, இஞ்சி ஈரத்தன்மை கொண்டிருப்பதால் அது பொறிந்து கொண்டே இருக்கும். எனவே அருகில் நிற்கும் போது ஜாக்கிரதையாக நிற்க வேண்டும். இந்த சலசலப்பு அடங்கியதும் எண்ணெயயை இறக்கி ஆறவிடவும். இதை சுத்தமான பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளலாம். அப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும்.
இந்த எண்ணெயில் இருந்த பித்தத்தை இஞ்சி இழுத்துக் கொண்டிருக்கும். அந்த புளி, இஞ்சியை எடுத்துவிடலாம். எனவே நீங்கள் ரேஷனில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமானதாக மாறிவிட்டது. இனி எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பாமாயிலில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விட்டமின் ஏ நிறைய இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications