Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ஜாய் பண்ணலாமா.. தமிழகத்தில் 40 இடங்களில் இனி டிரக்கிங் செல்லலாம்! மலையேற முன்பதிவு செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மலையேற்றம் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக அரசு சார்பில் 'டிரக் தமிழ்நாடு' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 40 இடங்களில் உள்ள மலைகளில் பொதுமக்கள் டிரக்கிங் செல்லாம்.

நம்மில் பலருக்கும் விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் இருக்கும். குறிப்பாக இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது பலருக்கும் அலாதி இன்பத்தை கொடுக்கும். அதேபோல் மலையேற்றம் செல்லவும் பலருக்கும் விருப்பம் இருக்கும்.

trek tamil nadu tamil nadu tour

ஆனால் மலையேற்றம் என்பது அவ்வளவு சுலபமானது இல்லை. மலையேற நாம் விரும்பினாலும் கூட அதற்கு நமது உடல் ஆரோக்கியம், மன தைரியம் நிச்சயம் வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தை பொறுத்தவரை மலையேற தடை உள்ளது. பலரும் காடுகள், வனப்பகுதியில் திசை தெரியாமல் சிக்கி கொள்வதே இதற்கு காரணமாகும்.

டிரக் தமிழ்நாடு: இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் மலையேற விரும்புபவர்களின் ஆசையை நிறைவேற்றவும், மலையேற பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு உதவிடவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் டிரக் தமிழ்நாடு (Trek Tamil Nadu).இந்த திட்டத்தை வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் 40 இடங்களில் மலையேற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14 மாவட்டங்கள்: எளிதான மலையேற்றம், மிதமான கலையேற்றம், கடினமான மலையேற்றம் என்று 3 பிரிவுகளில் மொத்தம் 14 மாவட்டங்களில் 40 இடங்கள் மலையேற்றம் செய்ய அடையாளம் கண்டு வனத்துறை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வன அனுபவக் கழகம், மாநில அரசின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் பற்றிய விபரத்தை அறிய www.trektamilnadu.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக மலையேற்ற வழித்தடங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்துவதன் வாயிலாக இந்த பாதைகளில் மலையேற்றத்தை மக்கள் மேற்கொள்ள முடியும்.

முன்பதிவு எப்படி: இந்த இணையதளத்தில் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை (Online Transaction) மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 40 இடங்களின் பட்டியல் வருமாறு:

வழிகாட்டிகள்: மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு,மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள்: மலையேற்றம் செல்பவர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கய்ரன் ஹில் (எளிது), லாங்வுட் ஷோலா (எளிது), கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்), அவலாஞ்சி கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா)- கோலாரிபெட்டா (மிதமானது), ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்) ஆகிய வழித்தடங்களில் மலையேற்றம் செய்யலாம்.

கோவை - திருப்பூர்: கோவையை எடுத்து கொண்டால் மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது), சாடிவயல் பண்டாரவரை சிறுவாணி (மிதமானது), செம்புக்கரை பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது), திருப்பூர் மாவட்டத்தில் சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது) உள்ளிட்ட இடங்களில் மலையேறலாம்.

குமரி - நெல்லை - தென்காசி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிகேசம் பாலமோர் (மிதமானது), இஞ்சக்கடவு (மிதமானது), திருநெல்வேலி மாவட்டத்தில் காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்), தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் செண்பகதேவி அருவி (எளிது), தீர்த்தப்பாறை (எளிது) உள்ளிட்ட இடங்களில் மலையேறலாம்.

தேனி - மதுரை - திண்டுக்கல்: தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சின்ன சுருளி - தென்பழனி (மிதமானது), காரப்பாறை (எளிது), குரங்கனி சாம்பலாறு (மிதமானது), விருதுநகர் மாவட்டத்தில் செண்பகத்தோப்பு - புதுப்பட்டி (மிதமானது), மதுரை மாவட்டத்ில் குட்லாடம்பட்டி அருவி முதல் தாடகை மலையேற்றப்பாதை (மிதமானது), திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டகானல் வெள்ளகவி (கடினம்), சோலார் ஆப்சர்வேட்டரி - குண்டாறு (0-பாயிண்ட்) (மிதமானது), ஓ பாயிண்ட் முதல் கருங்கஞ்சம் அருவி (எளிது) உள்ளிட்ட இடங்களில் மலையேறலாம்.

கிருஷ்ணகிரி - சேலம் - திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் சாமி எரி (எளிது), சேலம் மாவட்டத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் (மிதமானது), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்), நகலூர் - சன்னியாசிமலை (எளிது), திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி முதல் சாமிமலை (எளிது), ஜலகம்பாறை (மிதமானது).

திருவள்ளூர்: இந்த பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை. சென்னை அருகே மலை எதுவும் இல்லை. இருப்பினும் சென்னைக்கு பக்கத்தில் அருகே அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் குடியம் குகை (எளிது) பகுதியில் மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+