லாஸ்ட் செகன்ட்ஸ்.. ரயில் டிக்கெட் எடுக்க முடியலையா? நோ டென்ஷன்! இதோ இருக்கு ஈஸியான வழி
சென்னை: அவசரமாக வெளியூர் செல்பவர்கள் வெயிட்டிங் லிஸ்ட் அதிகமாக இருந்தாலும் கூட டிக்கெட்டை புக் செய்துவிட்டு காத்திருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காது. எனவே ப்ளான் மொத்தமும் சொதப்பிவிடும். இந்த நேரத்தில் ஒரு டிரிக்கை தெரிந்து வைத்திருந்தால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம்.
நாடு முழுவதும் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 12,617 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், சராசரியாக 2.3 கோடி பயணிகள் ட்ராவல் செய்கிறார்கள். அநேகமாக நீங்களும் கூட இந்நேரம் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருக்கலாம். சிலர் டிக்கெட் ரத்தானதால் அப்செட் ஆகி இருக்கலாம். ஆனால் இனி நீங்கள் டிக்கெட் குறித்து வெறுப்படைய வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

முதலில் IRCTC ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும். அதில், லாகின் செய்ய வேண்டும். ஏற்கெனவே உங்களுக்கு இதில் அக்கவுண்ட் இருந்தால் வேலை எளியதாக முடிந்துவிடும். இல்லையெனில் கொஞ்சம் டைம் எடுக்கும். மொபைல் நம்பர், முகவரி, ஏதாவதொரு அடையாள அட்டை ஆகியவற்றை கொடுத்து உங்களுக்கு என அக்கவுண்ட்டை முதலில் ஓப்பன் செய்ய வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
உள்ளே சென்றவுடன் TRAIN என ஒரு ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் BOOK TICKET எனும் ஆப்ஷனுக்கு போக வேண்டும். இதற்குள்தான் நீங்கள் எங்கிருந்து எதுவரை பயணிக்க போகிறீர்கள் என்கிற விவரத்தை உள்ளிட வேண்டும். பின்னர் கீழே சிவப்பு நிறத்தில் இருக்கும் SEARCH TRAINS எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் ரயில்களின் பட்டியல் கிடைத்துவிடும். (ஏற்கெனவே நீங்கள் ரயிலின் விவரத்தை தெரிந்து வைத்திருந்தால் வேலை இன்றும் எளிது)
இந்த ரயில்களில் எதில் போக வேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டு அந்த ரயில் எண்ணை தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணை நினைவில் வைத்துக்கொண்டு ஒரு பேஜ் பின்னால் வந்தால், CHART VACANCY என ஒரு ஆப்ஷன் காட்டும். அதை கிளிக் செய்தால் RESERVATION CHART எனக்கிற பேஜ் ஓபன் ஆகும். அதில் எந்த ரயிலில் நீங்கள் பயணிக்கிறீர்களோ அந்த ரயிலின் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும்.
அதேபோல தேதியை சரிபார்த்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள BOARDING STATION எனும் இடத்தில் எந்த இடத்திலிருந்து ட்ராவெல் செய்யப்போகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இறுதியாக GET TRAIN CHART என கொடுத்தால் ட்ரெய்னின் முன்பதிவு செய்யப்பட்ட பட்டியல் வந்துவிடும்.
அதில் எந்த நிறுத்தத்திலிருந்து, எந்த நிறுத்தம் வரை எந்த பெட்டியில் எத்தனை இருக்கைகள் காலியாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம். அந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டு, டிக்கெட் பரிசோதகர் வரும்போது அவரிடம் இருக்கைக்கான டிக்கெட்டை கேட்டு பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த ஐடியா ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்புவோருக்கு அதிகம் பயன்படும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications