இனிமே பணமே தேவையில்லை.. சென்னை பேருந்துகளில் புதிய டிக்கெட் முறை.. எப்படி பயன்படுத்துவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. இது எப்படி செயல்படும் என்று இங்கே பார்க்கலாம்.

சென்னை மாநகர பேருந்துகளில் எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய வசதி மூலம் இனி டிக்கெட் எடுக்க Card, UPI பயன்படுத்தி எடுக்கமுடியும் .

How to use the cashless ticket system in Chennai buses with automated ticketing machine ?

தேவைப்பட்டால் எப்போதும் போல பணம் கொடுத்தும் டிக்கெட் எடுக்க முடியும். சரி இந்த புதிய முறையில் எப்படி டிக்கெட் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

எப்படி எடுப்பது:

1. இதற்காக எஸ்பிஐ நிறுவனம் கார்டு வழங்குகிறது.

2. இதை பேருந்து நிலைய அலுவலகங்களில் சென்னையில் வாங்கலாம்.

3. அதை உங்கள் வங்கி கணக்கோடு இணைத்து ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.

4. பேருந்தில் ஏறியதும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அதை இந்த மெஷினில் நடத்துனர் பதிவு செய்வார்.

5, அதன்பின் உங்கள் கார்டை டேப் செய்தால்.. பணம் தானாக அரசு கணக்கிற்கு சென்று விடும்.

6, இதையடுத்து டிக்கெட் பிரிண்ட் ஆகிவிடும்.

7. இதுவே கடைகளில் செலுத்துவது போல யுபிஐ மூலம் பணம் செலுத்தியும் டிக்கெட் எடுக்கலாம்.

8. மெஷினில் மாட்டும் க்யூ ஆர் கோட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

புதிய டிக்கெட் முறை: இது போக மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை எல்லா சென்னை பேருந்திலும் அறிமுகப்படுத்தவுள்ளது. நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.

ஒரே டிக்கெட்: மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.

இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்ட்டர்களில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+