மோடியின் கனவு திட்டங்கள்.. தமிழ்நாட்டின் சாலை போக்குவரத்தே மாற போகிறது.. வாகன ஓட்டிகளுக்கு குஷி
சென்னை: ஒரு பக்கம் வங்காள விரிகுடா.. இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடல் என்று கடல்கள் சூழ மிக முக்கியமான பொருளாதார மையமாக திகழும் மாநிலம்தான் நம் தமிழ்நாடு. தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் சாலை போக்குவரத்து சிறப்பாக இருப்பது அவசியம். இதற்காக மத்திய பாஜக அரசு பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்தியாவில் முறையான சாலை கட்டமைப்பை கொண்ட, முறையான போக்குவரத்து வசதியை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னிலை வகிக்கிறது. அதிலும் இந்த சாலைகள் அத்தனை ரம்மியமான தோற்றத்தை கொண்டது. சென்னையின் பரபரப்பான தெருக்களில் இருந்து கன்னியாகுமரியின் அமைதியான கடற்கரை வரை, ஒவ்வொரு மைலும் காண்போரை வசீகரிக்கிறது. வழிநெடுகிலும் உள்ள பசுமையான வயல்வெளிகளும், வானுயர் கோபுரங்களும், காற்றாலைகளும் தமிழக நெடுஞ்சாலைகளில் பயனிப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவை!

இத்தனை அழகுகள் கொண்ட தமிழ்நாட்டில் சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரிசையாக பல சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. திருச்சியில் சாலை விரிவாக்கம் மற்றும் நெடுஞ்சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ளது மத்திய அரசு. இங்கே 5 வழி சாலை திட்டத்தை நாட்டுக்கு அற்பணித்து பணிகளை தொடங்கியுள்ளது.
முகையூரிலிருந்து மரக்காணம் வரையிலான 31 கி.மீ., நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணியும் இத்திட்டத்தில் அடங்கும். தமிழ்நாட்டின் போக்குவரத்தை மாற்ற போகும் திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
உலக பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரத்துக்கு சாலை இணைப்பை மேம்படுத்தும் வகையிலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கும் வகையிலும் இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை - திருச்சி பசுமை வழி சாலை, கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் மற்றும் திருப்பதி - திருத்தணி - சென்னை சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இவை எல்லாம் கட்டி முடிக்கப்பட்ட பின் தமிழ்நாட்டின் சாலை போக்குவரத்து பயண அனுபவமே புதிய மாற்றம் அடையும்.
அதிலும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க தற்போதைய மத்திய அரசு கடந்த அரசை விட 3 மடங்கு அதிகம் செலவிடுகிறது. இதனால் மின்னல் வேகத்தில் தமிழ்நாட்டில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு காட்டும் இந்த அசத்தல் வேகத்தால்தான் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை இணைப்பு 22,326 கி.மீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சாலை திட்டங்கள்தான் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட இத்திட்டங்கள், மக்களின் பயணத்தை எளிதாக்குவதோடு திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேசிபட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்தும். அதோடு அதீத கடல் வளம் கொண்ட தமிழ்நாட்டின் துறைமுகங்களை இணைக்க இந்த சாலை திட்டங்கள்தான் வழியை ஏற்படுத்தும்.
மேலும், தமிழ்நாட்டின் உள்கட்டமைபை மேம்படுத்தவும், மூதலீடுகளை ஈர்க்கவும், வளர்ச்சியை பெருக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டங்கள் உதவும். இதை எல்லாம் கருத்தில் கொண்டே மத்திய அரசு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 2,20,043 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2024 -25 பட்ஜெட்டில், விரிவான சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 23,365 கோடியும், சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தின் கீழ் 22,267 கோடியும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்திற்கு 908 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல போகின்றன.
மோடியின் மாஸ்டர்மைண்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேற்கண்ட திட்டங்களின் மூலம்தான் துறைமுகங்கள், கிராமப்புற சந்தைகள், பல்வேறு நகரங்கள், தளவாட மையங்கள், சுற்றுலா மையங்கள் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையில் எளிதான இணைப்பு ஏற்படுத்தப்படும். தமிழகத்தின் வளர்ச்சி மீது பிரதமர் மோடியின் மத்திய அரசும் சிரத்தை எடுத்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டின் சாலை போக்குவரத்து புதிய மாற்றத்தை பெறப்போகிறது.
2004 - 2014க்கு இடையில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 800 கி. மீ. அதுவே 2014 - 2023க்கு இடையில் அமைக்கப்பட்ட நீளம் 2000 கி.மீ. மத்திய அரசின் கீழ் தேசிய நெடுஞ்சாலை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நவீனமயமாக்கல், விரிவாக்கம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளுக்கு புதிய முகம் கொடுக்கும் மோடியின் இந்த திட்டங்கள் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற தொடங்கி உள்ளது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications