டிரம்ப் பக்கா பிளானோடுதான் இருக்கார் போல.. இந்தியா, ஈரான், சீனா.. அடுத்தடுத்து உலக நாடுகளுக்கு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் பக்கா பிளானோடுதான் ஆட்சிக்கு வருகிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. அடுத்தடுத்து இந்தியா, ஈரான், சீனா உள்ளிட்ட பெரிய உலக நாடுகளுக்கு செக் வைக்கும் விதமாக முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார். அவர் எடுத்த முக்கிய முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

முடிவு 1: இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

donald trump brics narendra modi

அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையே இந்த நாணயத்தை மட்டுமே பயன்படுத்தும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.

இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இதைத்தான் டிரம்ப் எதிர்த்து உள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.

2. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்கும் நேரத்திற்குள் காஸாவில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் பின்னணியில் இருக்கும் ஈரானுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்கும் தேதியான ஜனவரி 20, 2025க்கு முன்னதாக பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் இந்த அட்டூழியங்களைச் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அட்டூழியங்களைச் செய்யும் நபர்களுக்கு நரக வேதனை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் போராளிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால் ஈரானுக்கும் அதன் ஆதரவில் இயங்கும் ஹமாஸுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+