"வாரிக்கொடுத்த வள்ளல்.." கஷ்ட காலத்தில் லட்ச கணக்கில் தந்து உதவிய விஜயகாந்த்! நெகிழ்ந்த பால்ய நண்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த்திற்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும் ஒரு பிணைப்பு இருப்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

கேப்டன் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் காலமானார்.

 How Vijayakanth helped his old friend during their bad time

விஜயகாந்த் உடல் இப்போது அஞ்சலி செலுத்தத் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பலரும் விஜயகாந்த் குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்த்: அதேநேரம் விஜயகாந்த்திற்குக் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துடன் ஒரு பிணைப்பு இருப்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து நாம் பார்க்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே தான் விஜயகாந்த் வீடு இருந்தது. அவர் நல்ல செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவர் தமிழ்த் திரையுலகில் வாய்ப்பு தேடிப் பல ஆண்டுகள் அலைந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் அதிகம். ஒரு கட்டத்தில் வாய்ப்பு தேடி அவர் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கூட செல்ல வேண்டி இருந்தது.

"அண்ணன் விஜயகாந்த் எனக்கு செய்த உதவி.." நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் விஜய்.. டிரெண்டாகும் பழைய வீடியோ

இதற்கிடையே தற்போது திருவனந்தபுரத்தில் கிழக்கு கோட்டை என்ற பகுதியில் வசந்தம் என்ற ஃபேன்ஸி ஸ்டோரை விஜயகாந்த்தின் சிறு வயது நண்பர் ஜவஹர் தாஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஜவஹர் தாஸ் விஜயகாந்த் உடனான தனது நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 70களின் பிற்பகுதியில் ஜவஹரின் மாமனாரின் கடையில் வெல்வெட் ஷாம்பு வினியோகஸ்தராகவும், இமிட்டேஷன் நகை விற்பனையாளராகவும் விஜயகாந்த் இருந்ததாகக் கூறியுள்ளார்.

பால்ய நண்பர்: மேலும், விஜயகாந்த் உடன் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு எண்ணெய் ஆலைகள் கூட இருக்கிறது. ஆனாலும், தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு இருந்தது. இதனால் தனது குடும்பத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு திருவனந்தபுரம் வந்தார்.

அப்போது தமிழ் படங்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் திருவனந்தபுரத்தில் இருந்தது. இதனால் இங்கு வந்து வாய்ப்பை பெற அவர் முயன்றார். இங்கே உடனடியாக அவருக்குப் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அவரால் வீட்டில் இருந்தே செலவுக்குப் பணத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனாலும், விஜயகாந்த் அப்போது சும்மா இருக்க விரும்பவில்லை.

இதனால் அந்த சமயத்தில் விஜயகாந்த் எனது மாமனாரின் ஃபேன்சி கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார். மேலும், அப்போது பிரபலமாக இருந்த வெல்வெட் ஷாம்பூவின் வினியோகஸ்தரும் வேலை செய்தார். அப்போது நடிகர் விஜய்யின் தந்தையான திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி திருவனந்தபுரம் வருவார். அப்போது தான் இருவரும் இணைந்து பயணிக்க ஆரம்பித்தனர்" என்றார்.

செய்த உதவி: விஜயகாந்த் அகல்விளக்கு, தூரத்து இடி முழக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அமைந்த முதல் வெற்றிப் படம் என்றால் அது எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1981இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் தான். அதில் தொடங்கி விஜயகாந்த்- சந்திரசேகர் கூட்டணியில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்தன.

90களின் தொடக்கத்தில் ஜவஹர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கேரளாவில் ஜவஹர் குடும்பத்தினர் செய்த உதவியை மறக்காமல், ​​விஜயகாந்த் உடனடியாக ரூ.5 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+