சங்கீதாவின் மனதை மாற்றியது விஜய்யின் குழந்தைகள் மட்டுமில்லையாம்! அவர் பார்த்த அந்த ஒரு வீடியோ?
சென்னை: விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சங்கீதா, திடீரென மனுவை வாபஸ் பெற்றதற்கு அவர்களது மகன் சஞ்சய், மகள் திவ்யா மட்டும் காரணமில்லையா? சங்கீதா பார்த்த ஒரு வீடியோதான் அவரது மனதை மாற்றியதாம்.
திரைத்துறையில் சாதித்த விஜய், அரசியலிலும் புது வரலாறு படைத்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனைவி, மகன், மகள் ஆகியோர் மீது நல்ல பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்.

மனைவி மீதான பாசத்தை அவர் கலந்து கொண்ட திருமண விழாக்களில் எல்லாம் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் யார் கண்ணு பட்டுச்சோ! ஏதோ ஒரு சூழ்நிலையால் விஜய்யை விட்டு பிரிவதாக சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும் தன்னை மனரீதியாக ஒதுக்கி வைப்பதாகவும் சங்கீதா தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இது வரை 3 முறை இந்த விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்படி 3-ஆவது முறை வந்த போது நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து முடிவில், தான் வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா தெரிவித்தாராம். இதற்கு முழு காரணம் விஜய் விவாகரத்து பெற விரும்பாதது, மேலும் மகன் ஜேசன் தனது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
அது போல் திவ்யாவும் தனது பெற்றோர் பிரிவதை விரும்பாமல் தந்தை- தாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். மேலும் சங்கீதா சிலர் தூண்டிவிட்டனராம். இதனால் அவரிடம் அவருக்கு தேவையில்லாத விஷயங்களை எல்லாம் கொண்டு சென்றதால் அவர் டென்ஷனாகி விஜய் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அறிவுறுத்தலுக்கேற்பு அந்த நபர்களுடனான தொடர்புகளை சங்கீதா குறைத்துக் கொண்டாராம். மேலும் தான் மன உளைச்சலில் இருந்த போது சங்கீதா, விஜய்யுடனான திருமண வீடியோவை போட்டு பார்த்து வந்தாராம்.
அந்த வீடியோவை பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் தன் கண் முன் நிழலாடி மனதுக்கு ஆறுதலை தந்ததாம். அது போல் தனது சீமந்த புகைப்படங்கள், குழந்தைகளுடன் தானும் விஜய்யும் செலவிட்ட புகைப்படங்களை எல்லாம் அவர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதனாலும் அவரது மனம் மாற்றமடைந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றாராம்.
குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களது மனநிலையும் முக்கியம் என்பதாலும் சங்கீதா தனது பிடிவாதத்தில் இருந்து மாற்றிக் கொண்டார் என்கிறார்கள். இந்த தகவல்கள் உறுதியாக தெரியாவிட்டாலும், சினிமா விமர்சகர்கள், விஜய் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் சொன்னது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ எந்த ஒரு குடும்பமும் பிரியக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. எப்படியோ விஜய் சங்கீதா நீதிமன்ற படிகளில் ஏறினாலும், ஏறிய வேகத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டது வரவேற்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
