ஜாதகம் பார்த்த கருணாநிதி; நடந்தது என்ன? ஸ்டாலினை வீழ்த்துவாரா விஜய்? போட்டு உடைத்த உலகநாதன்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி, 2026இல் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அவரது ஜாதகம் எப்படி உள்ளது என்பது பற்றிய பல விசயங்களைப் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் கூறியுள்ளார்.
திலீப்குமார் என்ற பெயரை மாற்றி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனப் பெயர் வைத்தவர் ஓம் உலகநாதன் தான் என்பது உலகத்திற்கே தெரியும். அதை அவர் இப்போது மிகப்பெரிய போர்டில் எழுதிப் போட்டுள்ளார். கோடம்பாக்க வட்டாரத்தில் இவரைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ரஹ்மான் சக்சஸ் ஆன பிறகு அந்தளவுக்கு இவரும் புகழ்பெற்றுவிட்டார்.

இப்போது அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஜாதகம் பார்த்த போது என்ன நடந்தது என்பது பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முழுக்க முழுக்க நாத்தியவாதியான கருணாநிதி, ஜாதகம் பார்த்தாரா? என்று பலரும் ஆச்சரியப்படலாம். ஆனால், பார்த்திருக்கிறேன் என்றும் என்ன ஆண்டு?, என்ன தேதி?, எந்த இடம் என்பது உட்பட மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் உலகநாதன்.
மேலும் அவர் விஜய் 2026 முதல்வர் நாற்காலியில் உட்காருவாரா? திமுகவை தோற்கடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார். மு.கருணாநிதிக்கு ஜாதகம் பார்த்த நினைவுகள் பற்றி பேசியுள்ள உலகநாதன், "ஆமாம். நாம் கலைஞர் கருணாநிதிக்கு நேரடியாகவே ஜாதகம் பார்த்தேன். 1982 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதி பார்த்தேன். அவருடைய கோபாலபுரம் வீட்டுக்குப் போய் மாடியில் அவரை சந்தித்து ஜாதகம் பார்த்தேன். அவர் அறையில் வலது கை பக்கம் மகாபாரத போரில் தேரில் கிருஷ்ணன் இருப்பதைப் போல ஒரு தேர் இருக்கும். அதன் பக்கத்தில் அமர்ந்து பார்த்தேன்.
அப்போது அவரது உறவினர் அமிர்தம் உடன் இருந்தார். பலரும் அவருக்கு அந்த மாதிரியான விசயங்கள் பிடிக்காது என்பார்கள். அப்படியல்ல; அவர் நாம் சொல்வது உண்மையாக இருந்தால் ஏற்பார். அவரது கையை நானே பிடித்து ரேகை பார்த்தேன். அவரது மணிக்கட்டிலிருந்து விதி ரேகை நேராக நடு விரலுக்குப் போகும். அவரது மோதிர விரலில் ஒரு பவழம் அணிந்திருந்தார். அவர் மிருகசீரிஷம் நட்சத்திரம். ஆகவேதான் செவ்வாய்க்காகக் கையில் பவழம் போட்டிருந்தார்.
விதி ரேகை அப்படி இருப்பதால், அவர் எங்கிருந்தாலும் தனித்து நிற்பார். ஜாதக படி அவருக்குச் சனி உச்சம். அவருடைய யோகம் மொத்த குடும்பத்தையும் வாழ வைக்கும். இன்று வரை அவர் அளவுக்கு நீண்ட ஆயுளுடன் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர் என வேறு ஒருவரை யாரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர் சாதகம் கெட்டி. சனி கொடுத்தால் யார் தடுக்க முடியும்? அவ்வளவு பவர்ஃபுல் அவரது ஜாதகம்.
அப்போது, 'உங்கள் குடும்பத்தில் யாருக்குச் சனி உச்சத்தில் இருக்கிறதோ அந்தப் பிள்ளைதான் உங்கள் சிம்மாசனத்தை அலங்கரிப்பார்' என்று சொன்னேன். இன்றைக்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலினுக்கும் ஜாதக படி சனி உச்சம். இந்த 2024 மக்களவைத் தேர்தலில் கூட 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்று சொன்னேன். உதயநிதி அமைச்சராவார் என்று எப்போதோ நான் சொன்னேன்.
கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் ஜாதகமும் பவர் ஃபுல்லானது. குடும்பம் இந்தளவுக்குச் சிறப்பாக இருக்க அவர் ஜாதகமும் முக்கிய காரணம். அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு கருணாநிதி மேலும் உச்சத்திற்குப் போனார். கருணாநிதியின் புகழ் உச்சத்தின் போனதே 'பராசக்தி' திரைப்படத்திற்குப் பின்னர்தான். அப்போதே அவருடன் பராசக்தி சேர்ந்துவிட்டாள்.
கலைஞருக்குக் கடக லக்கினம். திமுக 1949இல் தொடங்கப்பட்டதே ராமரின் புனர்பூசம் நடச்சத்திரத்தில்தான். செப்டம்பர் 17 அன்று காலையில்தான் கட்சி தொடங்குவதாகத் திட்டம். ஆனால், அன்று மலை கொட்டோ கொட்டு எனக் கொட்டி தீர்த்தது. எனவே மாலையில் கட்சி தொடங்கினார்கள்" என்று கூறியுள்ளார்.
அதேபோல் 2026 ஸ்டாலினை வெற்றி பெற்று விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற கேள்விக்கும் இவர் விளக்கம் அளித்துள்ளார். அது பற்றி இவர், "எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து உடனே ஆட்சியைப் பிடித்துவிடவில்லை. 5 வருடங்கள் கழித்துத்தான் ஆட்சி நாற்காலியில் உட்கார்ந்தார். சினிமா புகழ் வேறு. அரசியல் புகழ் வேறு. ஆகவே, விஜய்யின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. 2026 நேரத்தில் அவரது ஜாதக நிலையைக் கணித்துத்தான் நாம் சொல்ல முடியும்.
விஜய் பிறந்த அதேநாளில் பிறந்தவர்கள் பலர் இருப்பார்கள். ஜாதகம் நன்றாக இருக்கிறது என்பதால் அத்தனைப் பேரும் முதல்வராகிவிட முடியுமா? ஆகவே அவரது கை ரேகையை வைத்துக் கணித்துச் சொன்னால்தான் சரியாக இருக்கும். இல்லை எனில் கணிப்பு தப்பிவிடும். அதற்கு அப்புறம் அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முக்கியம். அதையும் கணிக்க வேண்டும். முக்கியமாக விஜய் தாய், தந்தையர் ஜாதகத்தையும் அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் மிகத் துல்லியமாகச் சொல்ல முடியும்.

அப்படிச் சரியாகக் கணித்துச் சொன்னதால்தான் 2014லேயே மோடி மூன்று முறை நாட்டை ஆட்சி செய்வார் என்று சொன்னேன். அது இப்போது நிஜமாகி இருக்கிறது. அப்போது நான் சொன்னது பத்திரிகைகளில் வந்துள்ளது. அதன் ஆதாரமும் என்னிடம் உள்ளது. வாஜ்பாய் ஜாதகத்தை டெல்லியில் பார்த்து பிரதமராக வருவீர்கள் என்று சொன்னேன். அவர் கை ரேகையுடன் ஜாதகத்தை ஒப்பிட்டுச் சொன்னேன். அப்போது கூடவே அத்வானி இருந்தார். முரளி மனோகர் ஜோஷிதான் என்னை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். சொன்னதைப் போலவே வாஜ்பாய் பிரதமராக வந்தார்" என்கிறார்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்












Click it and Unblock the Notifications