இனி வங்கி இஎம்ஐயை செலுத்த தவறினால்.. போன் முடக்கம் செய்யப்படும்? எப்படி அமல்படுத்தப்படும் தெரியுமா?
சென்னை: கடன் தவணை செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை வங்கிகள் எப்படி பயன்படுத்தும் என்பது தொடர்பான விவகாரங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்தத் தயாராகி வருவதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. ஒரு நபர் லோன் வாங்கி அதை கட்டாமல் இருந்தால் இந்த குறியீடு உயரும். இப்படி கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

போன் வாங்கி லோன்
இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் இஎம்ஐ மூலம் போன் வாங்கி அதற்கு லோன் கட்டாமல் இருந்தால் அதை லாக் செய்யும் வழிமுறைகளை வங்கிகள் செய்யும். பல மாதங்களாகக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வந்த இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை தற்போது அமலுக்கு வர உள்ளது. EMI மூலம் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்குவது சரிதானா.. என்ற கேள்வியை இது நுகர்வோர் மத்தியில் எழுப்பியுள்ளது. இதனால் EMI மூலம் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் விற்பனை பெரிய அளவில் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
லோன் - மொபைல் போன்களைச் செயலிழக்கச் செய்ய அனுமதி
கடன் தவணை செலுத்தாத ஒருவரிடமிருந்து சாதனத்தை நேரடியாகப் பெறுவது வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சாத்தியமில்லை என்பதால், மென்பொருள் மூலம் அவர்களைத் தண்டிப்பது ஒரு எளிதான வழியாகும். முன்மொழியப்பட்ட விதிமுறைகளின்படி, வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFCs) ஒருவர் கடன் தவணைகளை செலுத்தத் தவறினால், கடன் மூலம் வாங்கப்பட்ட மொபைல் போன்களைச் செயலிழக்கச் செய்ய அனுமதிக்கப்படும்.
தற்போது, இந்த வசதி Google Device Lock Controller, Samsung Finance+ (சாம்சங் சாதனங்களுக்கு மட்டும்) அல்லது பிற மூன்றாம் தரப்பு லாக் செய்யும் செயலிகள் மூலம் செயல்படுகிறது. இவை சாதனம் வாங்கும் போது நிறுவப்படுகின்றன. இந்தச் செயலிகள் அவசரகால அழைப்புகள் போன்ற அத்தியாவசியச் செயல்பாடுகளைப் பாதுகாக்கும்.
புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டால், கடன் நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, கடன் தவணை செலுத்தாதவர்களின் போன்கள் முடக்கப்படலாம். இதே வசதி வரும் காலங்களில் கார்கள், டிவி,கணினி போன்ற சாதனங்களில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளன. ரிமோட் லாக் வசதியைச் செயல்படுத்துவதற்கு முன்பு, கடன் வழங்குநர்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து வெளிப்படையான சம்மதத்தைப் பெற வேண்டும்.
எப்படி செயல்படும்?
நீங்கள் ஒரு போன் வாங்குகிறீர்கள் என்றால் அது இஎம்ஐ மூலம் இருக்கும் பட்சத்தில் இந்த செயலி அதில் இன்ஸ்டால் செய்யப்படும். அதை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாது.
அதன்பின் நீங்கள் இஎம்ஐ காட்டாத பட்சத்தில் உங்கள் போன் லாக் ஆகும்.
emergency call என்ற ஆப்ஷன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நீங்கள் போன் வாங்கும் போதே இதற்கு அனுமதி அளித்து கடினம் தர வேண்டும்.
அந்த செயலியால் உங்களின் தனிப்பட்ட விவகாரங்களை கண்காணிக்க முடியாது.
இதே கட்டுப்பாடுகள் வரும் காலங்களில் டிஜிட்டல் டிவி, கணினி, இ வாகனங்களில் வரும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications