கணக்கு இடிக்குதே! அதிமுகவை பாஜக முந்தியதாக சொல்லும் சர்வே அயோக்கியத்தனமானது! காட்டமான பத்திரிகையாளர்
சென்னை: பாஜகவை விட அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைவு என்று சொல்வது அயோக்கியத்தனமானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 38.33 சதவிகித வாக்குகளை திமுக வெல்லும், 17.26 சதவிகித வாக்குகளை அதிமுக வெல்லும், பாஜக இரண்டாம் இடம் பிடிக்கும், 18.48 சதவிகித வாக்குகளை பாஜக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் எடுக்கும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த சர்வே தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், ஒரு ஊடகத்தில் பாஜக அதிமுகவை விட அதிக வாக்கு சதவிகிதம் பெறும் என்று கருத்து கணிப்பு வந்துள்ளது. பாஜக வளர்ந்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால் இந்த கருத்து கணிப்பே சந்தேகத்திற்கு உரியது. அதை சுற்றி நடக்கும் விவாதங்கள் சந்தேகம் தருகின்றன. இந்த கருத்து கணிப்பு மீதே சந்தேகம் உள்ளது. இந்த தொழில்நுட்ப சூழலில் எப்படி வேண்டுமானாலும் டேட்டா மாற்றலாம்.
இதேபோல் ஜார்கண்ட் தேர்தலை வைத்து கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. அந்த கணிப்பில் ஜார்கண்ட் விகுதி மோர்ச்சா அல்லது முக்தி மோர்ச்சா கட்சிக்கு 0.26 வாக்குசதவிகிதம் இருப்பதாக இதே நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டது. ஆனால் அந்த கட்சி அதற்கு 4 வருடங்களுக்கு முன்பே பாஜகவுடன் இணைந்துவிட்டது. பாஜகவுடன் இணைந்த கட்சிக்கு எப்படி தனியாக வாக்கு சதவிகிதம் இருக்கும்?
" பாஜகவை விட அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைவு என்று சொல்வது அயோக்கியத்தனமானது"- மணி, மூத்த பத்திரிகையாளர்
— Oneindia Tamil (@thatsTamil) February 29, 2024
Watch Interview : https://t.co/eNK5tHrQK7#JournalistManiInterview #BJP #Annamalai #PmModi #ADMK #ADMKAlliance #BJPAlliance #EPS #EdappadiPalanisamy #DMK #SenthilBalaji pic.twitter.com/EdVRCw9hig
சர்வே அயோக்கியம்: ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட பின் இது எப்படி சாத்தியம். அதே நிறுவனம்தான் இந்த கருத்து கணிப்பை எடுத்துள்ளது. பாஜகவிற்கு 18.48 சதவிகிதம் என்று சொன்னால்.. பாஜக இரண்டாம் இடம் வரும் என்று சொன்னால் குழந்தை கூட சிரிக்கும். திமுக மீது உள்ள கோபத்தால் அதிமுகவிற்கு கொடுக்கிறேன் என்று கூட கூறலாம். ஆனால் இப்படி பச்சையாக இதுவரை பெரிதாக முன்னேறாத பாஜக அதிமுகவை விட அதிக வாக்கு கொடுத்துள்ளனர்.
என்னங்க இது? இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த கருத்து கணிப்பே பெரிய தவறு. இது உள்நோக்கம் உள்ள கணிப்பு. உள்நோக்கத்தோடு திட்டமிட்டு இப்படி செய்துள்ளனர். ஒரு தொழில்முறையாக செய்தி சேனல் இப்படி செய்வது அச்சுறுத்தலாக இருக்கிறது. எந்த முறையில் இந்த கருத்து கணிப்பை நடத்தினர். இந்த விவரங்களை எல்லாம் வெளியிட வேண்டும். இந்த கருத்து கணிப்பு பெரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது .
விளக்கம் வேண்டும்: இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தேர்தல் நேரத்தில் மாறி வந்தால் அதற்கு அந்த நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அப்படியே போய்விட முடியாது. மக்களுக்கு விளக்கம் தர வேண்டிய கட்டாயம் இந்த சர்வே அடுத்தவர்களுக்கு உள்ளது. தேர்தல் முடிவுகள் இந்த கணிப்பிற்கு நேர் எதிராக வந்தால் என்ன நடக்கும்? இந்த கணிப்பை எடுத்தவர்கள் நோக்கங்களை நான் சந்தேகிக்கிறேன்.
தேர்தலில் இந்த அளவிற்கு மாற வாய்ப்பு இல்லை. பாஜக வளர்ந்து இருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியும் பாஜகவிற்கு சென்று இருக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் 3 சதவிகிதத்தில் இருந்து பாஜக எப்படி 18.4 சதவிகிதம் எடுக்கும். எப்படி இது அறிவியல்படி சாத்தியம். அப்படி என்றால் ஏன் எல் முருகன், அண்ணாமலை போட்டியிடவில்லை. இதை கேட்டால் வாயால் கூட சிரிக்க முடியாது.
5 வருடத்தில் என்ன செய்தார்கள் என்று இவர்கள் 6 மடங்கு உயர்ந்ததாக இவர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதிலும் அதிமுகவை விட 1 சதவிகிதம் கூடுதல் என்பதை பார்த்தால் காமெடியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications