இந்தியாவிற்கு ஆப்பு வைக்க போய்.. சொந்த செலவில்.. சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப்.. போச்சே
சென்னை: இந்தியாவிற்கு எதிராக பரஸ்பர "பதிலடி" வரி.. அதாவது reciprocal வரியை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்து உள்ளார். ஆனால் இந்த வரி விதிப்பால் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்றால் அமெரிக்கா மறைமுகமாக பாதிக்கப்படும்.
அதாவது இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாமல் கஷ்டப்படும். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவால் அமெரிக்காவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது. அமெரிக்கா மீது 25% வரிகளை கனடா விதித்து உள்ளது.
இந்தியா மீது வரி
இது போக Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க உள்ளார். இந்த கூடுதல் வரியை பொதுவாக அந்த நாடுகள் செலுத்தாது. மாறாக அமெரிக்க குடிமக்கள்தான் செலுத்த வேண்டும்.
புரிகிற மாதிரி சொல்வது என்றால்..
கனடாவில் ஒரு அமெரிக்கா அரிசி வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கான வரி இப்போது 25% உயர்ந்துவிட்டது.
இதை இறக்குமதி செய்து விற்பது ஒரு அமெரிக்க டீலராகவே இருப்பார். அவர் அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரியை கட்ட வேண்டும்.
இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட அவர் விற்பனை விலையை அதிகரிப்பார். இதனால் பொருட்களின் விலை உயரும். மெக்சிகோ மற்றும் கனடா இதனால் எப்படி நேரடியாக பாதிக்கப்படும் என்ற கேள்வி எழலாம். நேரடியாக மெக்சிகோ மற்றும் கனடா இதனால் பாதிக்காது.
கூடுதல் வரியால் மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களை வாங்க டீலர்கள் யோசிப்பார்கள். அதனால் அதன் மவுசு குறையும். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதை இறக்குமதி செய்யும் அமெரிக்கர்கள்தான். அவர்கள்தான் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்கும். அதிலும் சீனாவின் சில பொருட்கள் இல்லாமல் அமெரிக்காவில் வியாபாரமே நடக்காது. அதை எப்படி இருந்தாலும் அமெரிக்க டீலர்ஸ் அதிக வரி தந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும். இதைத்தான் சொந்த செலவில்.. சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்கர்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
கனடாவில் நடக்கும் புரட்சி:
இப்படிப்பட்ட நிலையில்தான் கனடாவில் நடக்கும் அரசியல் புரட்சி ஒன்று டிரம்பிற்கும் , அமெரிக்காவிற்கும் எதிராக திரும்பி உள்ளது. அதன்படி கனடாவில் கடைகளில் made in canada என்று போஸ்டர் பொருட்களுக்கு அருகே ஒட்டப்பட்டு உள்ளது.
அதாவது மக்கள் கனடா பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக கனடாவில் கடைகளில் made in canada என்று போஸ்டர் பொருட்களுக்கு அருகே ஒட்டப்பட்டு உள்ளது. அதோடு அமெரிக்க பொருட்களை காட்டி.. இந்த பொருளுக்கு பதிலாக கனடாவில் தயாரிக்கப்படும் இந்த பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இன்னொரு போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனால் கனடாவில் அமெரிக்காவிற்கு எதிரான மனநிலை வர தொடங்கி உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications