Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்ப் எடுக்காத மகளிர் உரிமை தொகை..பல மாநிலங்களில் காங்கிரசுக்கு உதவிய டெக்னிக்! ஹரியானாவில் தோல்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டம் தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றது. அங்கே தேர்தல் நடந்த நிலையில்.. காங்கிரஸ் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவித்து இருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி ஹரியானாவில் எடுபடவில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கே காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி 42 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

haryana assembly election 2024 jammu kashmir assembly election 2024 tamil nadu government notification magalir urimai thogai

முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்து முக்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்து இருந்தார்.

காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் பின்வருமாறு:

1) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம்.

2) காஷ்மீரி பண்டிட் பிரிவினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது.

3) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும். அதாவது உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன்.

4) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

5) OBC கள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெற இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படும் .

உரிமை தொகை திட்டம்: இதன் மூலம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. அங்கே இந்த திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது.

அதேபோல் ஹரியானாவில் காங்கிரஸ் ரூ.2000 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஹரியானாவில் காங்கிரசுக்கு இந்த திட்டம் உதவவில்லை. இமாச்சல பிரதேசம், கர்நாடகா, தெலுங்கனா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு உதவிய வாக்குறுதி ஹரியானாவில் காங்கிரசுக்கு உதவவில்லை.

ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.

ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. இந்த நிலையில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட அங்கே ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+