சென்னையில் ஆசையோடு போன என்ஜினியருக்கு ஆயுசுக்கும் மறக்க முடியாத பரிசு.. பூவிதா பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்த என்ஜினீயரை காதலித்து ஏமாற்றி உல்லாசத்துக்கு அழைத்து கொள்ளையடித்தது ஏன் என இளம்பெண் பூவிதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 37 வயதாகும் விக்னேஸ்வரன் என்ஜினீயர் ஆவார். இவரை காதலிப்பது போன்று நடித்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 19 வயதாகும் பூவிதா என்ற பெண் உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பான என்ஜினீயர் அளித்த புகார் பூவிதா மற்றும் அவரது நண்பர்கள் ஏழுமலை, கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதான பூவிதா இப்படியான வழக்கில் கைதானவது முதல்முறையாகும். முதல்முறை குற்ற வழக்கில் கைதாகி உள்ள பூவிதா நண்பர்ககளால் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளார். பூவிதாவின் நண்பர்கள் இரண்டு பேர் மீதும் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் இருக்கின்றன. பூவிதாவிற்கு கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.
முதல்முறை கொள்ளை வழக்கில் கைதாகி பூவிதா, ஏன் இப்படி கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பூவிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் வெளியிட்ட தகவலின்படி,
பூவிதா சென்னை எண்ணூரில் பிறந்து வளர்ந்துள்ளார. பள்ளி படிப்பு வரை படித்துள்ளார். அவரது தந்தை டிரைவராக உள்ளார். அவருக்கு அண்ணனும், அக்காவும் இருக்கிறார்கள். தன்னுடைய இளம் வயதிலேயே உறவுக்கார பெண் ஒருவரால் தவறான பாதையில் தள்ளப்பட்டுள்ளார்.. இந்த சூழ்நிலையில் தான் என்ஜினீயர் விக்னேஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூவிதாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
விக்னேஸ்வரன் மற்றும் பூவிதா இருவரும் அடிக்கடி செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். விக்னேஸ்வரனை பொறுத்தவரை அவர் ஏற்கனவே கல்யாணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இதனால் பூவிதா மீது காதல் பைத்தியமாக மாறி உள்ளார். பூவிதாவை திருமணம் செய்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். மேலும் பூவிதாவின் மேல் என்ஜினீயர் மோகம் கொண்டு இருந்திருக்கிறார்..
அவரை தனிமையில் சந்திக்க விரும்பி வற்புறுத்தினாராம்.. ஆனால் ஏழுமலையுடன் எம்.ஜி.ஆர். நகரில் பூவிதா வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் அவரை சந்திக்க விரும்புவதை ஏழுமலையிடம் பூவிதா கூறியுள்ளார். அவரை வரச்சொல். அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஏழுமலை பூவிதாவிடம் கூறினாராம். இதனால் விக்னேஸ்வரனை வரவழைத்துள்ளார்.
முதலில் அவரை மிரட்டுவதற்குதான் முடிவு செய்து இருந்துள்ளார்கள். திடீரென்று ஏழுமலையும், கிருஷ்ணனும் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஸ்வரனிடம் பணத்தை பறித்துள்ளார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத பூவிதா நண்பர்களின் திட்டத்தால் கொள்ளைக்காரி என்ற பட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.. இவ்வாறு போலீசார் விசாரணை குறித்த தகவலை தெரிவித்தனர்.
-
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications