திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சமணர்களின் தூண்.. உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனுதாரர் ராமரவிக்குமார் தீபம் ஏற்ற கூறிய தூணானது சமணர்கள் பயன்படுத்திய தூண் என்றும், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது தான் உண்மையான தீபத் தூண் என்று அறநிலையத்துறை சார்பில் கோர்டில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்கள் தான் இது, மதுரையின் உள்ள அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டது.

hr-ce-argues-in-court-on-authentic-deepam-pillar-near-uchipillaiyar-temple

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடமான உச்சி பிள்ளையார்கோயில் அருகே உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ராமரவிக்குமார் என்பவர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மலை மீது ஏறி ஆய்வு செய்துவிட்டு பின்னர் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் வழக்கம் போல் இந்த ஆண்டு கார்த்திகை தீபமானது உச்சிபிள்ளையார்கோவில் அருகே உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அறநிலையத்துறை வாதம்

திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இன்று அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. இதில் அறநிலையத்துறை சார்பில், மனுதாரர் ராமரவிக்குமார் தீபம் ஏற்ற கூறிய தூணானது சமணர்கள் பயன்படுத்திய தூண் ஆகும். நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்களே இது.

சமணர்களின் தூண்

மதுரையின் அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனிவாசன் சமண தூண்கள் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது தான் உண்மையான தீபத் தூண் என்று அறநிலையத்துறை சார்பில் கோர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+