8 விஷயம்.. அதைவிடுங்க.. ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2023 -2024 ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார்... ஆனால், இவர் பட்ஜெட் உரையை துவக்கியதுமே, எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துவிட்டனர்.

பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பேசும்போது, நிதிநிலைமை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.. இந்த நிதிநெருக்கடி நிலைமையிலும், திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

 8 விஷயங்கள்

8 விஷயங்கள்

நிதியமைச்சர் பேசும்போது, "பல்வேறு இடையூறுகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் . குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்ற உணர்வுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்... திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது. எல்லாருக்கும் ஒன்றான வளர்ச்சியை கருத்தில்கொண்டு, நம்முடைய மாநிலம் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.. பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு வேலைவாய்ப்பு, பெண்களின் வாழ்வாதாரம், சமூக...பொருளாதார வளர்ச்சி, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உறுதி செய்தல் உள்ளிட்ட 8 விஷயங்களில் முக்கிய கொள்கையாக கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். வரும் ஆண்டில் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளோம். முந்தைய அரசைக் காட்டிலும், வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடி குறைத்துள்ளோம்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

தியாகராஜன்

தியாகராஜன்

இதையடுத்து, பட்ஜெட் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகின.. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-க அதிகரிக்கப்பட்டுள்ளது.. கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,000-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ.100 கோடி செலவில் ஆதி திராவிட மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் ,இன்று வெளியாகி உள்ளன.

 பூரிப்பு

பூரிப்பு

அந்தவகையில், ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்... கடந்த வருடம் பட்ஜெட்டின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.. மேலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், இம்முறை, ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.

 கஜானா ஷாக்

கஜானா ஷாக்

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யும்போது ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது... ஆனால் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை பொதுமக்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து நிலவி வருகிறது.. அதுமட்டுமல்ல, அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி நிதி செலவு செய்யாமல் அரசு கஜானாவுக்குத் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கும் தகவல் ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஐ மூலம் தெரியவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+