ஹப்ப்பாடா.. வருது வருது "TN Alert" மொபைல் ஆப்.. இனி அலர்ட்டா இருக்கலாம் மக்களே.. தமிழ்நாடு அரசு வாவ்
சென்னை: தமிழகத்தில் நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், நில ஆவண விவரங்களை அறிய செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.. இதையடுத்து, TN-Alert என்ற மொபைல் செயலி என்றால் என்ன என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பொதுமக்களுக்கு இருப்பிடம் சார்ந்த பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வகையில் TN-Alert என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

VHF ரிப்பீட்டர்கள்: பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு பாதிப்பிற்கு ஆளாகிறது. இதை தவிர்க்கும் வகையில் அனலாக் VHF ரிப்பீட்டர்கள், டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக 7.31 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் சமீப காலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நில அதிர்வு அலைவரிசை உணர்விகள் மற்றும் தரவு கையகப்படுத்தும் அமைப்புகள் உடன் கூடிய கண்காணிப்பு நிலையம் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இதுதவிர நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் பட்டா, சிட்டா, கிராம வரைபடம், பிளாக் வரைபடம், புலப்படங்கள், தொடர்பு விளக்கப் பட்டியல் போன்ற பல்வேறு நிலம் சார்ந்த ஆவணங்களை இணையம் வழியே வழங்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பின் முக்கிய அம்சங்கள்: பேரிடர் முன்னறிவிப்பு, மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். தடையற்ற தொலைத் தொடர்பு சேவைக்காக அனைத்து மாவட்டங்களிலும் VHF கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
நில ஆவணங்கள்: மயிலாடுதுறையில் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும். வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடி செலவில் பலப்படுத்தப்படும். தமிழகத்தில் சமீப காலங்களில் நிலநடுக்கம் உணர்வதை கருத்தில் கொண்டு தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நில நடுக்க கண்காணிப்பு மையம் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும். நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பாக இ-சேவைகள் தொடர்பான தகவல்களை அளிக்கும் வகையில் தொலைபேசி மையம் நிறுவப்படும். இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும்...

அதேபோல, நில சீர்திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொல் நீக்கப்படும். நலிந்தோர் உதவித் தொகை திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் தொகை திட்டம் தொடர்பான சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும். வருவாய் துறையில் இனி வரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும்... நில ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதற்கு உறுதுணையாக தொலைபேசி அழைப்பு மையம் ஒன்று நிறுவப்படும்.
புல வரைபடங்கள்: கிராம வரைபடங்களிலும், புல வரைபடங்களிலும் Geo-referencing பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புலப்படங்கள் செல்போன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் விதத்தில் ஒரு புதிய செயலி உருவாக்கப்படும். இதையடுத்து கிராமங்களில் குடிசை தொழில்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடையவும் சுய உதவி குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவும், கிராமங்களில் குடிசைத் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு குடிசைத் தொழில் செய்ய விரும்பும் பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications