பொங்கலுக்கு முன் எல்லாம் மாற போகுது.. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் முக்கிய மாற்றம்? ரொம்ப கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதம் ரூ. 1000 வழங்கும் இந்த திட்டத்தில் முக்கியமான மாற்றம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டது. அதில், மகளிருக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும், பின்னுக்கு தள்ளி முந்தி நிற்கிறது தமிழ்நாடு அரசு.

Huge change is going to come in Kalaingar 1000 RS Housewives scheme soon

அந்த வகையில்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது
.
மகளிர் உரிமை திட்டம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ். முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கடந்த வாரம் தீபாவளிக்கு முன் இந்த பணம் பெண்களின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது.

விரைவில் மாற்றம்: இந்த நிலையில்தான் மாதம் ரூ. 1000 வழங்கும் இந்த திட்டத்தில் முக்கியமான மாற்றம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மாதம் 15ம் தேதிக்கு பதிலாக இனி மாத தொடக்கத்திலேயே பணம் வழங்க அரசு ஆலோசனை செய்து வருகிறதாம் .

மாத தொடக்கத்திலேயே பணம் வழங்கினால் வீட்டு செலவுகள், வாடகை, மளிகை போன்ற பொருட்கள் வாங்க உதவும். பட்ஜெட் போட எளிதாக இருக்கும். இதை மனதில் வைத்து முன்கூட்டியே பணத்தை வாங்கிக்கணக்கிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியும் பொங்கலை முன்னிட்டு முன்கூட்டியே பணம் வங்கி கணக்கில் போடப்படும். இதனால் டிசம்பர் மாதத்தில் இருந்தே முன்கூட்டியே பணத்தை போடும் ஆலோசனையில் அதிகாரிகள் உள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+