சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல

வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று 3 பேரை சாய்ஸில் வைத்துள்ளாராம் எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், போட்டியிட போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. ஏற்கனவே சின்னம் விவகாரம் தலைதூக்கிய நிலையில், 2 விதமான குழப்பங்கள் எடப்பாடி கூடாரத்தை சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடப்பதால், தொகுதிக்குள் பல எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும்..

இந்த தேர்தலில் முதலில் 5 முனைப்போட்டி எழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், எதிர்பாராத விதமாக 6 முனை போட்டி உருவாகும் வாய்ப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது..

அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த எடப்பாடி.. கிரவுண்ட் பக்கமே வராதே ஓபிஎஸ்! கப்சிப்.. நடுங்க வைத்த அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த எடப்பாடி.. கிரவுண்ட் பக்கமே வராதே ஓபிஎஸ்! கப்சிப்.. நடுங்க வைத்த

 ரோல் பாஜக

ரோல் பாஜக

நடக்க போவது ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றாலும், இங்கு வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது என்று சொல்லி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. திமுக கூட்டணியை எதிர்த்து, அத்தனை கட்சிகளுமே மோதுவதால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரிப்பது யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் எழுந்துள்ளது.. இதில் மிக முக்கியமாக பாஜகவின் ரோல் என்ன என்பதும், ஆர்வமாக உள்ளது.. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வியூகமும் உள்ளதால், அதிமுக - பாஜக - நாம் தமிழர் என்ன செய்ய போகின்றன என்பதும் ஆவலை கிளப்பி விட்டுள்ளன.

விஜயகாந்த்

விஜயகாந்த்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால்,எடப்பாடி பழனிசாமி இன்னும் அறிவிக்கவில்லை.. ஓபிஎஸ்ஸும் தன் பங்குக்கு அறிவிப்பதாக சொல்லி உள்ளார் அவரும் அறிவிக்கவில்லை.. ஆலோசனை கூட்டம் நடத்தி, ஒரே நாளில் தேமுதிக சார்பிலும் ஆனந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். தானே நேரடியாக போட்டியிடலாமா? என்று யோசிப்பதாக தினகரன் கூறியிருந்த நிலையில், அமமுகவின் தினகரனும் இன்றைய தினம் தன்னுடைய வேட்பாளரை அறிவித்துவிட்டார்..

குலசாமி

குலசாமி

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு மிக தீவிர யோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு வருவதற்கு முன்பு நசியனூர் என்ற பகுதியில் இருக்கும் அவரது குலதெய்வ கோயிலுக்கு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.. மனமுருக வேண்டிக்கொண்டு, ஈரோடுக்கு வந்துள்ளார்.. ஆலோசனையும் தீவிரமாகி கொண்டிருக்கிறது.. வேட்பாளருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் செய்வார்கள் என்று அங்கிருந்த அதிமுகவினரிடம் அறிவித்ததாக தெரிகிறது.. எடப்பாடி இப்படி சொன்னதும்தான், ஈரோடு அதிமுகவுக்கு கொஞ்சம் தெம்பு ஏற்பட்டதாம்..

 2 முடிச்சுகள்

2 முடிச்சுகள்

ஆனால், 2 விதமான சிக்கல்களில் எடப்பாடி பழனிசாமி தடுமாறி வருவதாக தெரிகிறது. சின்னம் கிடைக்காத சூழலில், எந்த சின்னத்துடன் களத்தில் இறங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம்கோர்ட்டை எதிர்பார்த்து வருகிறது எடப்பாடி தரப்பு.. வரும் திங்கள்கிழமை முறையீடு செய்யுங்கள் என்று நீதிபதிகள் சொல்லிவிட்ட நிலையில், அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள்.

 கூவும் சேவல் ?

கூவும் சேவல் ?

எனினும் இலை கிடைக்காத நிலையில், சின்னம் குறித்த ஆலோசனைகள் நடந்தபடியே உள்ளன.. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று தனது பலத்தை நிரூபித்தது போல, தங்களுடைய அணியும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, ஏற்கனவே ஜெயலலிதா "சேவல்" சின்னத்தில் போட்டியிட்டதால் எடப்பாடி அணியினர் சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்தனர்.

 கூவும் சேவல்

கூவும் சேவல்

ஆனால், பறவைகளை சுயேட்சை சின்னமாக ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தற்போது நிறுத்தி விட்டது. அதனால் சேவல் சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைக்காது... இதையடுத்துதான், எடப்பாடி அணியினர் "புல்லட்" சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தை அணுக ஆயத்தமாகி வருகின்றனர்.. புதிய சின்னம் என்பதால், இதற்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கலக்கமும் எடப்பாடி தரப்பிடம் கவ்வி வருகிறதாம்..

 பெஸ்ட் சாய்ஸ்

பெஸ்ட் சாய்ஸ்

அதேபோல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று நேற்று முதல் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்... அந்த ஆலோசனை இன்றும் தொடர்கிறது.. அந்த வகையில் 3 பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாம்.. இந்த 3 பேரில் ஒருவரே களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. கடந்த ஒரு வாரமாகவே ராமலிங்கம் பெயர்தான், பிரதான சாய்ஸாக இருந்து வருகிறது.. ராமலிங்கம் சீனியர் என்றாலும், அவர் சற்று தயக்கம் காட்டினாராம். அதனால், போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் இருந்ததாக தெரிகிறது..

 3 சாய்ஸ்

3 சாய்ஸ்

ஆனால், தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக்கொள்ளும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சொன்னதையடுத்து, அவர் சம்மதம் தெரிவித்தாராம்.. ஆனால், கடந்த 2 நாளாக, அதிலும் மாற்றம் தென்பட்டுள்ளது.. மீண்டும் வேட்பாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டு, அது தொடர்பான ஆலோசனைகளும் நீடித்து வருகிறது.. இந்நிலையில் 3 பேரின் பெயர்கள் அதில் அடிபட்டுள்ளன.. அந்தவகையில், ராமலிங்கத்தைவிட, முன்னாள் எம்எல்ஏவான தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. இவர் தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருக்கிறார்..

நந்தகோபால்

நந்தகோபால்

எனினும், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் அல்லது மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.. முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற ஆலோசனைதான் நடந்து வருகிறதாம்.. இந்த 3 பேரில் யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்ற கோணத்திலேயே ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. எப்படி பார்த்தாலும் இந்த 3 பேரில் ஒருவர்தான் வேட்பாளர்என்பதால், நாளைய தினம் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியவரும் என்கிறார்கள்

English summary
Huge Decision by edapadi team and what are the 2 main issues in AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X