அடிதூள்! படுவேகமாக பையோ-மைனிங்.. கலக்கலாக மாறும் பெருங்குடி குப்பை கிடங்கு! வியக்கும் நெட்டிசன்கள்
பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது.
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்
குப்பையை முறையாக அப்புறப்படுத்துவது என்பது பல ஊர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக மக்கள்தொகையை கொண்ட இடங்களில் இது ரொம்பவே கடினம்.
மக்களிடம் இருந்து குப்பைகளை பெற்று, அதை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய வேண்டிவற்றை மறுசுழற்சி செய்து. மற்ற குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது என்பது மிக பெரிய பணி.

குப்பை
தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. தனிநபர் வீடுகள், பெருநிறுவனங்கள், பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இதில் அடக்கம்.. சென்னையில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சேகரிப்படும் குப்பைகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இவை பெரும்பாலும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கு
வடசென்னையில் கொடுங்கையூர், தென்சென்னையில் பெருங்குடி பகுதியிலும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதில் தென்சென்னையில் அமைந்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 1988 முதலே குப்பைகள் கொட்ட்பபட்டு வருகிறது. சுமார் 228 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், ஒவ்வொரு நாளும் 3000 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

சதுப்பு நிலம் ஏன் முக்கியம்
சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். ஏனென்றால், சதுப்புநிலம் என்பது பல்லுயிர்கள் வாழும் பகுதி. நன்னீர் சதுப்புநிலம் எப்போதும் மற்ற பகுதிகளை காட்டிலும் 10 மடங்கு அதிகமான நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும். இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக கையாள்பபடுவதில்லை என்றும் இதனால் இந்த பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்ததாக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்தனர்.

பயோ-மைனிங்
இதற்கிடையே பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மை இந்தியா நிதி, மாநில அரசின் நிதி, சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்புடன் இத்திடம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
|
பெருங்குடி குப்பை கிடங்கு வீடியோ
இதற்கிடையே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ட்விட்டரில், "பயோமைனிங் பணிகளை விரைவுபடுத்திய பிறகு பெருங்குடி குப்பைத் கிடங்கில் இருக்கும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறதா.. பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடியில் அனைத்து கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
-
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
Marina Rope Car: சென்னை மக்களின் கனவாச்சே.. மெரினா ரோப் கார் திட்டத்தை கைவிட முடிவா? போச்சு! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications