30 எம்எல்ஏக்களா.. அதிரும் எடப்பாடி டீம்.. "அவர்" கிட்டயே கிளம்புகிறாராமே "அக்கா".. அட விஜயசாந்தி வேற
சசிகலா அமித்ஷாவை சந்திக்க விஜயசாந்தி மூலம் முயற்சி செய்து வருகிறாராம்
சென்னை: சசிகலாவின் அதிரடி விரைவில் துவங்க போகிறது என்கிறார்கள்.. அதற்கான வேலைகளும் சைலண்ட்டாக ஒருபக்கம் நடந்து வந்தாலும், சசிகலாவின் 2 பிளான் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. இதை எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் என மொத்த பேருமே உற்றுகவனித்து வருகிறார்கள்.. என்ன நடக்கிறது சசிகலா தரப்பில்?
அதிமுக விவகாரங்கள் உச்சத்துக்கு போய்விட்ட நிலையில், இன்னும் சுமூக எட்டப்படவில்லை.. ஒன்றுபட்ட அதிமுகவுக்க பாஜகவும் மறைமுகமான அழுத்தத்தை தந்து வருகிறது.
ஓபிஎஸ் + எடப்பாடி + பாஜக என எல்லாருமே கோர்ட் முடிவைதான் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் சசிகலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

ட்ரீட்மென்ட்
நேற்று திடீரென மறைந்த ஜெயலலிதாவின் ட்ரீட்மென்ட் விஷயம் குறித்து பேட்டி தந்துள்ளார். அந்தவகையில், இது அவரது தீவிர அரசியலுக்கான அடுத்தக்கட்ட அதிரடியாக இருக்குமோ என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. கடந்த வாரம் சசிகலா குறித்த ஒரு தகவல் நமக்கு கிடைத்தது.. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம் விகே சசிகலா... வாரத்துக்கு இருமுறை சசிகலாவிடம் பேசும் ஓபிஎஸ், அதை நிறுத்தி விட்ட நிலையில், கடந்த 3 வாரங்களாகவே அவர் சசிகலாவிடம் பேசவில்லையாம். அதேபோல, வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்ததோரும் சசிகலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

25 எம்எல்ஏக்கள்
அவரது சகோதரர் திவாகரன் மட்டும் தினமும் இரவு 10 மணிக்கு பேசுகிறாராம். அரசியல் அப்-டேட்டுகள் குறித்து விவாதிக்கிறாராம்.. அப்படித்தான் ஒருமுறை பேசும்போது, சசிகலாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை திவாகரன் பகிர்ந்து கொண்டாராம்.. "அக்கா, அதிமுக எம்எல்ஏக்கள் பலர் என்னிடம் பல விஷயங்களை பேசுகின்றனர்... அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ என்கிற கவலை அவர்களிடம் உள்ளது.. அதிமுகவிலிருந்து 25 எம்எல்ஏக்கள் உங்கள் பக்கம் வர ஆர்வமாக இருக்கிறார்கள்.. அவர்களை சின்னம்மா தன்பக்கம் இழுத்து கொண்டால், இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும், ஆனால், பொருளாதாரம் சார்ந்த சில எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருக்கு. அதை சரி செய்தால் உடனே நம்ம பக்கம் வந்துவிடுவார்கள்" என்று திவாகரன் சொன்னாராம்.

30 MLAs
அதற்கு சசிகலா, "சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளதே.. தினசரி செலவுக்கே நான் தள்ளாடுவது உனக்கே தெரியும்.. இந்த சூழலில், அவர்களின் பொருளாதார சிக்கலை சரி செய்ய நான் எப்படி உதவ முடியும்? என்றெல்லாம் சொல்லி, பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க இயலாத சூழலை வெளிப்படுத்தினாராம் சசிகலா. ஆக, பணம் மட்டும்தான் பிரச்சனை என்றும், அதை சரிசெய்துவிட்டால் 25 முதல் 30 எம்எல்ஏக்கள் சசிகலா பக்கம் வர ரெடியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.. இப்போது இன்னொரு புதுதகவல், சசிகலாவின் அந்த பணப்புழக்கம் குறித்து நமக்கு கிடைத்துள்ளது..

அட்டாச்மென்ட்
சசிகலாவிடம் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் நிலையில், சசிகலாவின் செலவுக்கு மாதம் ஒரு பெரிய தொகையை அவருக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறாராம் திவாகரன்... இந்த நிலையில், சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் அட்டாச் செய்யப்படாத சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளாராம் சசிகலா.. அதாவது, 2011 - 2016 அதிமுக ஆட்சி காலத்தில் வாங்கி குவிக்கப்பட்ட பல சொத்துக்கள் சசிகலாவின் உறவுகள், தூரத்து உறவுகள், சில அரசியல்வாதிகள் என்று பினாமி பெயர்களில் இருக்கின்றன..

பினாமி உறவுகள்
அதில் சிலவற்றை விற்றுவிட முயற்சித்தபோது, அந்த பினாமி உறவுகள், சசிகலாவின் முடிவுக்கு திடீரென ஒத்துழைக்க மறுக்கிறார்களாம்... இதனால் தன்னுடைய பினாமிகள் மீது செம காட்டத்தில் இருக்கிறாராம் சசிகலா... இதற்கிடையே, அமித்ஷாவை சந்திக்க நடிகை விஜயசாந்தி மூலம் மீண்டும் முயற்சித்துள்ளார் சசிகலா.. உடனே சசிகலாவுக்கான அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு அமித்ஷாவை அணுகியுள்ளாராம் விஜயசாந்தி என்று சசிகலா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது..!!

கலர் சாயம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பும், சசிகலாவை திடீரென சந்தித்து விஜயசாந்தி பேசியிருந்தார்.. "சின்னம்மா எனக்கு அம்மா போல.. நான் அவருக்கு மகள் போல" என்று விஜயசாந்தி பாசத்தை பிழிந்தாலும், அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்பதால் இந்த சந்திப்புக்கு "அரசியல் சாயம்" அப்போது அதிகமாகவே பூசப்பட்டது.. காரணம், மேலிடத்தில் சிபாரிசு தேவை என்ற கட்டாயத்தில் கடந்த 2 வருடமாகவே சசிகலா முயற்சித்து வருகிறார்..

ஹெச்.எம் ஜி
ரஜினியை வைத்து ஒருபக்கம் முயற்சித்த நிலையில், விஜயசாந்தி மூலமாகவும் இந்த உதவியை அவர் நாடியதாக தெரிகிறது.. சசிகலாவை விஜயசாந்தி சந்தித்த பிறகு, சசிகலா விஷயம் தொடர்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவிடமும் பேசினாராம்.. அப்போது, "ஹெச்.எம்"ஜி-யை சந்திக்க சசிகலா விரும்புகிறார்.. (ஹோம் மினிஸ்டர் அமித்ஷாவைதான், சுருக்கமாக ஹெச்.எம். என்று சொல்வார்கள்) ஆனால், அவரை சந்திப்பதற்கு முன்பாக உங்களை சந்திக்க விரும்புகிறார். அவருக்காக 20 நிமிடம் நேரம் ஒதுக்க இயலுமா ஜி? என்று கேட்டாராம் விஜயசாந்தி.

பச்சை கொடி
அதற்கு ஜே.பி.நட்டாவோ, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடியட்டும், பிறகு பார்க்கலாம் என்றாராம்.. இந்த நம்பிக்கை மிகுந்த வார்த்தையை சசிகலாவிற்கு விஜயசாந்தி உடனே பாஸ் செய்ய, புதிய உற்சாகத்தில் சசிகலா இருப்பதாக கூறப்பட்டது.. இப்போது மீண்டும் ஒருமுறை இதே ரூட்டை கையில் எடுத்துள்ளார் சசிகலா.. பாஜக மேலிடம் மட்டும் சசிகலாவுக்கு லேசாக பச்சைக் கொடியை காட்டிவிட்டால், அதிமுக மொத்தமாகவே தன்னுடைய கைக்குள் வந்துவிடும் என்பதே சசிகலாவின் கடந்த 2 வருட கால பிளானாக இருந்து வருவதாக தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications