மோடியை திக்கி திணற வைக்கும்.. நாயுடு - நிதிஷ்.. பாஜகவிற்கு ரத்த கொதிப்பு.. அதுவும் இந்த 6 விஷயம்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிற்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையில் பல்வேறு விஷ்யங்களில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம்.

லோக்சபா 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் வீழ்ந்து உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் சில உதிரி கட்சிகள் சேர்ந்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

வேறுபாடு: இப்போது ஆட்சி அமைக்க மேற்பட்ட எல்லோரும் பாஜகவிற்கு ஆதரவு அளித்துவிட்டனர், மோடியை பிரதமராக தேர்வு செய்யவும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இவர்கள் எல்லோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அப்படியே மோடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்.

ஏனென்றால் அதற்கு முன் அமைச்சரவையை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். எந்தெந்த துறைகளை ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால் இதில்தான் இவர்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக 6 விஷயங்களில் இவர்களுக்கு இடையில் கடுமையான வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம்.

1. அக்னிவீர் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறுகிறது. அதேபோல் இந்த திட்டம் வேண்டாம் என்று லோக் ஜனதா கட்சியின் சிராக் பாஸ்வான் தெரிவிக்கிறார். ஆனால் பாஜக இந்த திட்டத்தை கைவிடும் எண்ணத்தில் இல்லை.

2. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார் மட்டுமல்ல நாடு முழுக்க இதை நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது. இதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.

3. கூட்டணி ஆட்சியில் பொதுவாக முக்கிய அமைச்சரவையை கேட்டு பெறக்கூடியதில் வல்லவரான சந்திரபாபு நாயுடு, தனது மாநிலமான ஆந்திராவுக்கு "சிறப்பு வகை அந்தஸ்து" வழங்க வேண்டும் என்கிறார். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிறார் நிதிஷ். இதை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4, சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசத்தின் தனது கட்சிக்கு லோக்சபா சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

5. அதோடு அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் உள்ள உள்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளையும் நாயுடு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை நாயுடு கட்சிக்கு போனால்.. நாட்டின் பாதுகாப்பு அவர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். இதை பாஜக கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

6. இன்னொரு பக்கம் நிதிஷ் குமார்.. நிதித்துறை தங்களுக்கு வேண்டும். ரயில்வே துறையும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறாராம். இதையும் பாஜக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையாம்.

7. பாஜக நாடு முழுக்க இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உள் இடஒதுக்கீட்டை நீக்க நினைக்கிறது. ஆனால் தெலுங்கு தேசம் அதை விரும்பவில்லை.

நாயுடு - நிதிஷ் குமாரின் இந்த பிரஷர் காரணமாக பாஜக - நரேந்திர மோடி இரண்டு தரப்பும் திக்கி திணறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+