Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ரெஸ்பான்ஸ்.. முதல்வர் ஸ்டாலினுக்கு 21 லட்சம் பேர் வாழ்த்து.. உற்சாக குரலோடு வந்த நன்றி அழைப்பு!

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவரையும் போனில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மூலம் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்போன் மூலம் 21 லட்சத்து 67 ஆயிரத்து 411 பேர் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கின்றனர்.

பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களின் எண்ணுக்கு அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலின் பிறந்தநாள்

ஸ்டாலின் பிறந்தநாள்

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் திமுக நிர்வாகிகள், தொண்டர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். திமுக தகவல் தொழில்நுட்ப அணி இரு புதுமையான ஏற்பாடுகளை செய்தது. திமுக உடன்பிறப்புகள் பலருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். தொண்டர்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்க நவீன தொழில்நுட்பத்தில் புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்டாலினுடன் செல்ஃபி

ஸ்டாலினுடன் செல்ஃபி

மெய்நிகர் சேவையை பயன்படுத்தி முதல்வருடன் புகைப்படம் எடுத்து தங்கள் வாழ்த்தையும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. www.selfiewithcm.com என்ற இணையதளத்துடன் கியூ.ஆர்.குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலினின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்பி எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்யலாம் என்றும் திமுக அறிவித்தது.

21 லட்சம் + 16 லட்சம்

21 லட்சம் + 16 லட்சம்

இந்த இரண்டு பிரச்சாரங்களும் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 28) எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த ஃபிளாஷ் மாப் நிகழ்வில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஃபோன்-எ-விஷ் பிரச்சாரத்தில் 21,67,411 பேர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் செயல்படுத்தப்பட்ட செல்ஃபி வித் சி.எம் பிரச்சாரத்தின் மூலம் 16,75,484 பேர் முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்தனர். இதில் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தும், நாடு கடந்தும் ஏராளமானோர் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.

நன்றி தெரிவித்த ஸ்டாலின்

நன்றி தெரிவித்த ஸ்டாலின்

பிறகு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அழைப்பாளர்களுக்கும் குரல் அழைப்பு மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து விடுத்த குரல் அழைப்பில், 'வணக்கம். மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். எனது பிறந்தநாளுக்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்து வந்து சேர்ந்தது. மிகவும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியா முழுவதிலுமிருந்தும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும் அழைப்புகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்' என்று உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+