சென்னை மின்சார ரயிலில் செல்லும் மாணவ, மாணவியருக்கு.. அதிரடி கட்டுப்பாடு.. உடனே இதை நோட் பண்ணுங்க
சென்னை: ரயிலில் சாகசம் செய்தால் இனி கைதுதான் என்றும், மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி அளித்துள்ளார்.

ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'ரூட்டு தல' பிரச்சினை தொடர்பாக கலவரங்களில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் மற்ற பயணிகள் பிரச்சனையில் சிக்குகின்றனர்.
இப்படி கலவரத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய பெரிய கத்தியோடு ரயில்ல வராங்க. மோதல் செய்கிறார்கள். உள்ளேயே அடித்துக்கொள்கிறார்கள். அவங்க லைஃப் வீணாக கூடாதுன்னு எவ்ளோவோ சொல்லி பாத்தோம்.
கைது செய்தால் கூட நடவடிக்கை எடுப்பது இல்லை. நாங்கள் பலமுறை சொல்லியும் யாரும் கேக்குறமாதிரி தெரியல என்று ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை: இதன் காரணமாகவே ரயிலில் சாகசம் செய்தால் இனி கைதுதான் என்று மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மின்சார ரயில்களில் அதிக அளவில் இப்படி மாணவ, மாணவியர் செய்வது வழக்கம் ஆகி உள்ளது. சென்னையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடனும், வாள்போன்ற நீண்ட அரிவாளுடனும் விரட்டி விரட்டி வெட்டினர்.
ரூட்டு தல: சமீபத்தில் கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய பிளாட்பார்மில் கோடு போட்டு பயணிகளை அச்சுறுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட 'ரூட்டு தல' பிரச்சனையால் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து ஒன்று அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில் நின்ற போது பேருந்தில் இருந்த ஒரு பிரிவு மாணவரை மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
ரயில்கள் எச்சரிக்கை: பேருந்துகளில் இருப்பது போல ரயில்களிலும் இதேபோல் ரூட்டு தல பிரச்சனை உள்ளது. இதையடுத்தே ரூட்டு தல' பிரச்சினை தொடர்பாக கலவரங்களில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் மற்ற பயணிகள் பிரச்சனையில் சிக்குகின்றனர்.

இப்படி கலவரத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயிலில் சாகசம் செய்தால் இனி கைதுதான் என்றும், மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications