காற்றில் கலந்த நஞ்சு.. மூச்சை பிடித்து ஓடிய மக்கள்.. ஆய்வில் ஷாக் ரிசல்ட்.. என்ன நடக்குது எண்ணூரில்?
சென்னை: எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.

அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அம்மோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
அதிர்ச்சி ரிசல்ட்: எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன. எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் கடல் நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்றிலும், கடல் நீரிலும் அமோனியாவின் கலப்பு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிக்கையில் வெளியிட்டு உள்ளார். காற்றிலும், கடல் நீரிலும் அமோனியாவின் கலப்பு அதிகரித்திருப்பது உறுதியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்: எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூச்சு திணறல்; எண்ணூர் ரசாயன தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பலரும் கடுமையாக மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கே உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கே தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications