"மூன்று முகம்".. டிடிவி தினகரன் ஆட்டம் ஆரம்பம்.. அவர் "இங்கே" வர்றாரா? அதிரும் எடப்பாடி பழனிசாமி டீம்
சென்னை: ஓபிஎஸ்ஸின் வியூகத்தை வீழ்த்துவதற்காக, எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினால், அதைவிட வேகமாக இன்னொரு வியூகத்தை கையில் எடுத்து அசரடித்துவிடுகிறார் டிடிவி தினகரன்.. என்னதான் நடக்கிறது?
90 சதவீத கட்சியை தன்னிடம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியால், இந்த ஒரு வருடகாலமாகவே, ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரையும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை..
அதேபோல, எதிர்பார்த்த அளவுக்கு தென்மண்டலத்தில், வாக்கு வங்கியையும் எடப்பாடியால் அதிகரிக்க முடியவில்லை.. முக்குலத்தோரின் அதிருப்திகளையும் போக்க முடியவில்லை..

முக்குலத்தோர் பலம்: போதாக்குறைக்கு, இப்போது தினகரனும் ஓபிஎஸ்ஸுடன் இணைந்துவிட்டது, எடப்பாடிக்கு லேசான கலக்கத்தையே தந்து வருவதாக தெரிகிறது. ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பானது, முக்குலத்தோர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் மதுரையில் மாநாட்டை கூட்ட போகிறார் எடப்பாடி பழனிசாமி..
மதுரை மாநாடு: அன்று திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு கூட்டியதால், பதிலுக்கு மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநாட்டை ஆகஸ்ட் 20-ல் நடத்த உள்ளதாக தெரிகிறது.. தென்மண்டலத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதால், மதுரையை குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அரசியலில் ஓபிஎஸ்ஸைவிட, தினகரனையே முக்கிய போட்டியாக எடப்பாடி கருதுவதாக சொல்கிறார்கள்.. இதுவரை நடந்த தேர்தல்களில், அமமுக பெற்ற வாக்குகள் பெரும்பாலும், திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களும், அதிமுகவின் ஓட்டுக்களும்தான்..
இந்த வாக்குவங்கியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே டெல்டாவை குறி வைத்தும், முக்குலத்தோர் வாக்குகளை தன்வசம் திருப்ப வேண்டும் என்பதற்காகவும், எடப்பாடியின் காய்நகர்த்தல் நகர்வதாக தெரிகிறது.. இப்போது விஷயம் என்னவென்றால், ஓபிஎஸ்ஸூம், தினகரனும் சேர்ந்து, இதே மதுரையில் இன்னொரு மாநாடு நடத்தப்போகிறார்களாம்.. எடப்பாடி மாநாடு முடிந்ததுமே, அந்த மாநாட்டை நடத்துவார்கள் என தெரிகிறது..

ஒரே மேடையில்: தினகரனை நேரில் சென்று சந்தித்ததுபோலவே, விரைவில் சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்க போகிறாராம்.. அதற்கு பிறகு, 3 பேரும் இணைந்து செயல்படுவதை வெளிப்படையாகவே தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமியின் மாநாடு முடிந்ததுமே, அதைவிட பெரிய மாநாடு நடத்தி, அந்த மாநாட்டு மேடைக்கு சசிகலாவை அழைத்து வர ஓபிஎஸ் + தினகரன் திட்டமிட்டிருக்கிறார்களாம்.. 3 பேரும் ஒரே மேடையில் இணைந்து நின்று, கட்சித்தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸூக்கு தேனியை தாண்டி செல்வாக்கு கிடையாது, அதை மதுரை மாநாட்டில் திரளும் கூட்டத்தை வைத்து நிரூபிப்போம் என்று செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா போன்ற தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வரும்நிலையில், தங்கள் பலத்தை நிரூபிக்கவே, இந்த மாநாட்டை அதே மதுரையில் நடத்த திட்டமிட்டும் வருகிறார்களாம்.. ஆனால் எப்போது நடத்துவது, யார் யார் அந்த மாநாட்டில் பங்கேற்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம்.
செல்வாக்கு எவ்வளவு: எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரும் பிரிந்து சென்ற நிலையில், தனித்தனியாக இந்த மாநாடுகளை நடத்த உள்ளனர்.. தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்ஸூக்கு இருப்பதாகவும், நிர்வாகிகள் பலம் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. பல்வேறு தேர்தல்களை சந்தித்து, டிடிவி தினகரன், தனக்கான வாக்கு வங்கியை தக்கவைத்து வரும்நிலையில், ஆனால், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு, எவ்வளவு பலம் தனித்தனியாக இருக்கிறது என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை..
காரணம், பலத்தை நிரூபிப்பதற்கான தேர்தலும் இதுவரை நடத்தப்படவில்லை.. உண்மையான பலத்தை தேர்தல் களத்தில் மட்டுமே நிரூபிக்க முடியும் என்றாலும், தனித்தனியாக இப்போது மாநாடு நடத்துவதன் மூலம் ஓரளவு பலத்தை அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
அதுமட்டுமல்லாமல், இந்த மாநாடுகளை நடத்துவதன்மூலம், பாஜகவுக்கு தங்கள் பலத்தை காட்ட முடியும் என்று, இரு தரப்பிலுமே நம்புகிறார்களாம்.. ஓபிஎஸ் தரப்பில், சசிகலாவை மாநாட்டுக்கு அழைத்து வருவதுபோல், எடப்பாடி தரப்பிலும், முக்கியபுள்ளி ஒருவரை, மதுரை மாநாட்டுக்கு அழைத்து வரப்போகிறார்களாம்.. அந்த புள்ளி, தினகரனுக்கு நெருக்கமானவர் என்றும், தற்போது தினகரனுடன் அவர் அதிருப்தியில் உள்ளதால், இதை தங்களுக்கு சாதகமாக அதிமுக பயன்படுத்தி கொள்ள முனைவதாகவும் கூறப்படுகிறது. ஆக, தென்மண்டலங்களில் உண்மையிலேயே யாருக்கு அதிக பலம் உள்ளது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications