Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவனுக்கு வந்த திடீர் ஆசை.. "கைமாறும் கணக்கு".. வெளிச்சம் வீசும் விசிக.. ஆனால் திமுக ஏற்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட துவங்கிவிட்டனர்.. இதில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் களமிறங்கி உள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, இப்போதே பலம்வாய்ந்துதான் உள்ளது.. இதில், தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் உள்ளே வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், விசிகவின் நிலைப்பாடும், திமுக கூட்டணியுடன் உறுதியாகவே இருந்து வருகிறது.

விசிக: வழக்கம்போல், தேர்தல்களில், விசிக அணிமாறுமா? என்ற விவாதம் சோஷியல் மீடியாவில் நடக்கும்.. இப்போதும் அப்படி ஒரு விவாதம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி உறுதி என்பது குறித்து, எத்தனையோ முறை செய்தியாளர்களிடம் திருமாவளவனே சொல்லிவிட்டார். ஆனாலும், திருமா அணி மாறுவாரா? என்று சிலர் கிளப்பிவிட்டபடியே இருக்கின்றனர்.

Huge Strategy by Thirumavalavan and How many seats Will DMK allot to VCK in the MP election

சில நாட்களுக்கு முன்பு நாம் ஒரு பிரத்யேக செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது, திருவள்ளூர் தொகுதியில், இந்த முறை திருமாவளவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சி பொதுச்செயலர் ரவிகுமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்...

இதில், சிதம்பரம், விழுப்புரம் அருகருகே உள்ள தொகுதிகள் என்பதால், இருவருமே எம்பியாக இருந்தும், வட மாவட்டங்களில் கட்சியை வலுவாக கட்டமைக்க முடியவில்லை என்ற எண்ணம் உள்ளதாக தெரிகிறது.

திருமாவளவன்: அதுவும் இல்லாமல், ஏற்கனவே, 2 முறை சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார்... அந்த தொகுதியை தாண்டி, விசிக பரவலாக தமிழகமெங்கும் இன்னும் அழுத்தமாக கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகவே தொகுதி மாற போவதாக சொல்கிறார்கள். அதனால்தான், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல இன்னொரு தகவலும் வட்டமடித்து வருகிறது.. இந்த முறை கூடுதல் தொகுதியை திமுகவிடம் கேட்க போகிறதாம் விசிக..
அதுவும் இல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிடவும் விசிக விரும்புகிறதாம்.. கடந்த, 2019-ல் பானை சின்னத்தில் போட்டியிட்டு, திருமாவளவன், படாதபாடு பட்டுதான் வெற்றியை பெற்றிருந்தார். விழுப்புரம் தொகுதியில், அக்கட்சி பொதுச் செயலாளர் ரவிகுமார் மட்டும், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதனால் இப்போதுவரை அவர் திமுக எம்பியாகவே கருதப்படுகிறார்.

தனிச்சின்னம்: அதனால்தான், பானை சின்னத்தையே இந்த முறை விசிக விரும்புகிறதாம்.. குறிப்பாக, சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட தனித் தொகுதிகளை தவிர, கூடுதலாக ஒரு பொது தொகுதியிலும் போட்டியிடவும், விசிக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.. அந்த 3 தொகுதிகளிலுமே பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே திருமாவளவனின் விருப்பமாக உள்ளதாம்..

இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவையில் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் திமுக. கொறாடாவிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. . ஆனால், இதுவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தங்கள் கட்சியினரே அந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

திருமாவளவன்: அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சரவையில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுவிட்டால், திமுகவுக்குதான் லாபமாக முடிந்துவிடும்.. அதனால்தான், பானை சின்னம் என்பதில் விசிக இப்போதிருந்தே உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

தற்சமயம்வரை, இதுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் திமுகவுடன் விசிக ஆரம்பிக்கவில்லை என்று தெரிகிறது.. எனினும், விசிகவின் அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.. மாவட்ட செயலாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, விசிக புத்தம் பொலிவாகி கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு, சிறுத்தைகளும் தேர்தலுக்கு ஜரூராக தயாராகி வருகிறார்கள். எம்பி தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், இனிமேல்தான், தொகுதி விவகாரம், சீட் பிரச்சனைகள் போன்றவை திமுக தலைமையுடன் விசிக ஆலோசிக்கும் என்று தெரிகிறது.

ஆனால், எந்த ஒரு கட்சியுமே, அந்தந்த கட்சியின் சின்னங்களை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகின்றன.. சின்னம் என்பது ஒரு கட்சியின் அந்தஸ்து மட்டுமல்ல, அது அக்கட்சி கொள்கையின் "முழு அடையாளமும்" கூட.. அந்தவகையில், தொல்.திருமாவின் எதிர்பார்ப்புகள் முழுக்க முழுக்க நியாயமானவையே என்றாலும், விசிகவின் இந்த ஆசைக்கு, திமுக எந்த அளவுக்கு செவிசாய்க்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+