சல்லி சல்லியா போகுது "அங்கே".. மகிழ்ச்சியில் குதிக்கும் திமுக.. ஸ்டாலினுக்கு பெரிய சப்போர்ட்.. இவரா?
சென்னை: அதிமுக, பாஜக இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், திமுக கூட்டணி பெருத்த பலம்பெற்று வருகிறது. அந்தவகையில், மேலும் ஒரு கட்சி திமுகவுக்கு ஆதரவை தந்துள்ளது.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு, சீட் விவகாரம் உள்ளிட்ட விவரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மற்றொருபுறம், தங்களது கட்சிக்கான களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான வியூகங்களையும் வேகப்படுத்தி வருகின்றன..
திமுக கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில், தற்சமயம், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மட்டுமே வலுவானதாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது, கடந்த முறை தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணியே இப்போதும் தொடர்ந்து வருகிறது.
இதில், புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சியாக ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை ஆதரவை தந்துள்ளது.
அலகுமலை: ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் அலகுமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் வீ. அழகு சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆதித்தமிழா் ஜனநாயக பேரவையின் நிறுவனத் தலைவா் பவுத்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அப்போது, நடக்க போகும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது... இதைத்தவிர, அருந்ததியர் சமூகத்துக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரூர்: கடந்த 2021 தேர்தலின்போது, தருமபுரி மாவட்டம், அரூரில் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கான சமூக நீதி வலியுறுத்தி அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது.. அப்போது, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் இரா.அதியமான் செய்தியாளர்களிடம் பேட்டி தந்தபோது, "இந்த முறை எல்லாரும் கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் அவர் பேசும்போது, "கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் செய்யும் அதிமுக, அருந்ததியர் சமூக மக்களுக்கு என எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த சமூக மக்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
பொதுத்தேர்தல்: அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நன்றி உடையவர்களாக 2021ல் நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் களப் பணியாற்றுவோம். எந்த சக்தியாலும் ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க முடியாது.. " என்று கூறியிருந்தார். இதையடுத்து, ஆதித்தமிழர் பேரவைக்கு 1 சீட் ஒதுக்கப்பட்டு, அவிநாசி தொகுதியில் உதயசூரியன் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் திமுகவுக்கு தன்னுடைய அபரிமிதமான ஆதரவை ஆதித்தமிழர் பேரவை அளித்துள்ளதுடன், அருந்ததியர் சமூகத்துக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
வித்தியாசம்: தேர்தல் நேரத்தில், அப்படியான அமைப்புகள் தங்களுடைய ஆதரவை, பிரதான கட்சிகளுக்கு வழங்கி, கூட்டணியில் சீட்டுகளை பெற்று, கூட்டணி மேலிடம் வழங்கும் சின்னத்திலேயே போட்டியிடுவது வழக்கம்.. அந்தவகையில், தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுகவுக்கு மட்டுமே இதுபோன்ற அமைப்புகள் ஆதரவை தந்து வந்தன. ஆனால், இந்த முறை தேர்தலில் பாஜகவும் 3வது அணியை அமைக்கும் என தெரிவதால், இந்த முறை கூட்டணிகள் வித்தியாசமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications