SBI வங்கி சர்ப்ரைஸ்.. அட 45 நிமிஷத்தில் கடன் கிடைக்கும்! பாரத ஸ்டேட் வங்கி செம! யாருக்கு பாருங்க
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று சொல்லப்படும் எஸ்பிஐ வங்கி, தொழில் கடனுக்காக காத்திருப்பவருக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்ந்து வருகிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.. இந்த வங்கி தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.. அதேபோல, தன்னுடைய கஸ்டமர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ தொடர்ந்து வழங்கி வருகிறது.

தனிநபர் கடன்கள்: அந்தவகையில் தனிநபர் கடன்களிலும் (Personal Loan) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.. அந்தவகையில், தனிநபர் கடன் பெற விரும்புபவர்களுக்கு, எஸ்பிஐ வங்கி சமீபத்தில்கூட ஒரு சர்ப்ரைஸ் செய்தியை அறிவித்திருந்தது.
அதாவது ரூ.20 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்து, தனிநபர் கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கியிருக்கிறது எஸ்பிஐ. இந்த சலுகையானது கடன் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்... காரணம், அத்தகைய கடன்களுக்கான வழக்கமான செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 1.5 சதவிகிதம் ஆகும்.
நிதி நெருக்கடி: இதோ இப்போதுகூட இன்னொரு அதிரடி முடிவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ளது... அதாவது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறது..
சிறிய அளவிலான கடன்களுக்கான வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, SME (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) டிஜிட்டல் வணிக கடன்கள் என்ற சிறப்பு திட்டத்தை வங்கி தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடன் வழங்கப்படும்.
கடன் நிறுவனங்கள்: இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், கடன் வாங்கும் நிறுவனங்கள் ஐடிஆர், ஜிஎஸ்டி ரிட்டர்ன், வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை தந்தால் போதும்.. அடுத்த சில நிஷத்திலேயே கடன் அனுமதி தகவல் தெரிவிக்கப்படும் சிறப்பு தொழில்நுட்ப வசதியும் இதில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ. 50 லட்சம் வரை கடன் எடுக்கலாம் என்பதால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இந்த புதிய திட்டம். அடுத்த 5 ஆண்டுகளில், 'சிறு தொழில் கடன் (MSME)' மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று எஸ்பிஐ வங்கி நம்புகிறது.
வங்கி கணக்கு: ஒருவேளை உங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் கணக்கு இல்லையென்றால் வெறும் 5 நிமிடத்திலேயே கணக்கை நீங்கள் துவங்கலாம்... எஸ்பிஐ வங்கியில் முதன்முதலில், கணக்கு துவங்க வேண்டுமானால், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மைனருக்கான கணக்கை திறக்கலாம்.
கூங்கி கணக்கை துவக்க, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு படிவம் 16 (பான் கார்டு இல்லை என்றால்) 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.












Click it and Unblock the Notifications