அண்ணா சாலையே ஆட போகுது.. இந்த "ஸ்ட்ரெச்சில்" இனி பைக், காரில் போகவே முடியாது போலயே.. கவனமா இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை பணிகள் காரணமாக இங்கே மொத்தமாக பேரிகேட் போடப்பட உள்ளது. அடுத்த 2 வருடத்திற்கு இங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் இதனால் ஏற்படலாம். மக்கள் இங்கே பயணம் செய்யும் விதம் கடுமையாக பாதிக்கப்படலாம். இந்த திட்டத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

Huge traffic may arise in Anna Salai due to Chennai Thenampettai Saidappettai Bridge works

3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

இன்ஜினியரிங் அதிசயம்: இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில் பரபரப்பான அண்ணாசாலையில் 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் பாலங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்தான் நீண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும், மேலும் இது சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். மெட்ரோ சுரங்கத்தை இது பிடிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும்.

மேம்பாலம் பணிகள்: இந்த மேம்பாலம், வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் CMRL இன் தலைமை பொது மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளார். இதில் சுரங்கப்பாதையில் கட்டுமான கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பதற்கான கருவி வேலைகளை நிறுவுவ வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மேலும் சிஎம்ஆர்எல் மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ. 500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது.

₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை.

அண்ணாசாலை செல்ல இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இனி அந்த பாலத்தில் சென்றால் 5 சிக்னல்களில் நிற்க வேண்டியது இல்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் 5 நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடம் ஆகும். பீக் நேரங்களில் இதை விட கூடுதலாக இருக்கும்.

தி நகர் செல்பவர்கள் கீழே சென்று விடுவதால் பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் இருக்காது. சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும்.

இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநில நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சமீபத்தில் ஏலம் கோரியது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ரூ. 525 கோடி, இது சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.164 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+